சைகையில் வாக்கு சேகரித்த பிரேமலதா: காரணம் என்ன?

Report Print Aathi Aathi in இந்தியா
சைகையில் வாக்கு சேகரித்த பிரேமலதா: காரணம் என்ன?

தே.மு.தி.க - மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு கேட்டு பிரேமலதா விஜயகாந்த், 2ம் கட்ட பிரசாரத்தை நேற்று கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், கொள்ளைக்கார கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வை தமிழ்நாட்டு மக்கள் அகற்றிட வேண்டும்.

தி.மு.க இல்லையென்றால் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுத்த நீங்கள் கேப்டனுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்.கேப்டன் தலைமையில் மகத்தான கூட்டணி அமைந்துள்ளது.

கேப்டன் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் படித்த, படிக்காத இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பை முதல் மூன்று மாதத்திற்குள் ஏற்படுத்துவோம்.

டாஸ்மாக்கை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்த கட்சிகளை மக்கள் புறந்தள்ள வேண்டும். இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையில் நடக்கம் போர்.

மக்கள் கேப்டன் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசியுள்ளார்.

இந்நிலையில், இரவு பத்து மணியை தாண்டி விட்டதால், பிரேமலதா மைக் இல்லாமல் சைகையில், கன்னியாகுமரி தே.மு.தி.க வேட்பாளர் ஆதிலிங்க பெருமாளுக்கு முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்துள்ளார்.

இரவு பத்து மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்பதால் பிரேமலதா சைகையில் பிரசாரம் செய்துள்ளார். இதனால் தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் செய்வதறியாது நின்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments