விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கியதே திமுக தான்: சீமான்

Report Print Aathi Aathi in இந்தியா
விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கியதே திமுக தான்: சீமான்

விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கியதே திமுக தான் என கோவையில் சீமான் பேசியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெஞ்சமின் பிராங்கிளின் என்பவரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்துள்ளார்.

அப்போது பேசிய அவர், எதிர்கால தமிழர்களுக்காக வாழ்க்கை கேட்டு உங்களிடம் வந்துள்ளோம்.மு.க. ஸ்டாலின் மக்களை சந்தித்து என்ன பிரச்சனை உள்ளது என்று கேட்கிறார்.

இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தபோது மக்களின் பிரச்சனை தெரியவில்லையா? விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கியதே அவர்கள் தானே.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்கிறார்களே அவர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடுவோம் என்று வாக்குறுதி அளிப்பார்களா?

மேலும், இந்த தேர்தல் பணநாயக்கத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையேயான போர், தீய ஆட்சிக்கும், தூய ஆட்சிக்கும் இடையேயான போர் என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments