வில்லனாக ஆக்க முயற்சி செய்யாதீர்கள்: விஜய் மல்லையா ஆவேசம்

Report Print Our Reporter Our Reporter in இந்தியா
வில்லனாக ஆக்க முயற்சி செய்யாதீர்கள்: விஜய் மல்லையா ஆவேசம்

இந்தியாவுக்கு, தான் இப்போது திரும்ப வாய்ப்பு இல்லை என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது மோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2ம் திகதி பிரித்தானியாவுக்கு விஜய் மல்லையா சென்று விட்டார்.

அங்கிருந்தவாறு அவர் ஒரு பத்திரிகைக்கு மின்னஞ்சலில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அடிப்படையில் நான் ஒரு இந்தியன்.

இந்திய நாடு தான் எனக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்தது. இந்தியா தான் விஜய் மல்லையாவை உருவாக்கியது.

எனவே இந்தியா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால் அதற்கான சரியான நேரம் இது அல்ல என்று நினைக்கிறேன்.

ஏனெனில் நான் நிரபராதி என என்னை நிரூபிக்க தற்போது அங்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்குமா? என்று சொல்ல முடியாது.

எனவே இந்தியாவுக்கு நான் இப்போது திரும்ப வாய்ப்பு இல்லை. ஆனால் கண்டிப்பாக நேரம் வரும் போது நான் அங்கு செல்வேன்.

எந்த ஒரு சிறிய தொழிலாகவோ அல்லது மிகப்பெரிய தொழிலாகவோ இருந்தாலும் அதில் லாபம் அல்லது நஷ்டம் இருக்கும் என மக்களுக்கு தெரியும்.

இதனை வங்கிகளும் உணர்ந்தே எனக்கு கடன் வழங்கி உள்ளது. கடன் வாங்கியது என்னுடைய தொழில் சார்ந்த விஷயம்.

நான் வெளிப்படையாக பேசுபவன். ஆனால் தற்போது அமைதியாக உள்ளேன். ஏனெனில் என்னுடைய பதிலையே எனக்கு எதிராக திருப்பிவிட வாய்ப்பு உள்ளது.

எனவே என்னை வில்லனாக ஆக்க முயற்சி செய்யாதீர்கள். நான் வெளிநாடுகளுக்கு செல்வது இது முதல் முறையல்ல.

ஆனால் ஊடகங்கள் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. நான் வெளிப்படையாகவே வாழ விரும்புகிறேன். மறைந்து இருக்க ஒருபோதும் நினைத்தது இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments