பாரதிய ஜனதா கட்சியின் முக்கியஸ்தர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

Report Print Dias Dias in இந்தியா

உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சிவ் குமார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவின் திக்ரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவ் குமார், அக்கிராமத்தின் தலைவரான இவர் பாஜக நிர்வாகியும் ஆவார்.

இந்நிலையில் இன்று மாலை பாதுகாவலர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து சிவ் குமாரை நோக்கி சுட்டுள்ளனர்.

இதில் சிவ் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார், அவருடன் வந்த மற்ற இருவரும் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர்.

எனினும் உயிருக்கு போராடிய பாதுகாவலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers