பெண்கள் இந்த வாஸ்து இரகசியங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்... இல்லனா துரதிர்ஷ்டமாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்

திருமணமான பெண்கள் செய்யும் சில தவறுகள் அவர்களின் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.

குறிப்பாக பெண்கள் அணியும் மூக்குத்தி, வளையல், கொலுசு. கழுத்தில் அணியும் செயின் என அனைத்தும் அதற்கென தனிப்பட்ட பலனை கொண்டுள்ளது.

இருப்பினும் அதனை உபயோகிக்கும் முன்னும், உபயோகிக்கும் பின்னும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

பெண்கள் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் வாஸ்து பற்றி தெரிந்து வைத்து கொள்வது நல்லது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • வளையல் பெட்டியில் உடைந்த வளையல்கள் இருந்தால் உடனே அதை அப்புறப்படுத்தி விடவேண்டும். ஏனெனில் உடைந்த வளையல்களை வைத்திருப்பது பெண்களுக்கு துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.

  • பெண்களுக்கு திருமண புடவை ஒருபோதும் செய்யக்கூடாது. உங்கள் திருமண புடவையை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம், ஏனெனில் அதில் விழும் சிறுகீறல் கூட கெட்ட சகுனமாகும்.

  • திருமணமும் மெஹந்தி போடுவதும் பிரிக்க முடியாத ஒன்றாகும். இது கணவன், மனைவிக்கிடையேயானா நெருக்கத்தை அதிகரிக்கும். முடிந்த அளவிற்கு வீட்டிலேயேவாது மெஹந்தி அணிந்து கொள்ளுங்கள். இது மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.

  • நீங்கள் பயன்படுத்திய பொட்டை மீண்டும் மீண்டும் நீங்களே உபயோகிக்கலாம் ஆனால் அதனை ஒருபோதும் மற்றவர்களுக்கு கொடுத்து விடாதீர்கள். இது உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே அவர்களுக்கு கொடுப்பது போன்றதாகும்.

  • உங்கள் திருமண நகைகளை ஒருபோதும் மற்றவர்களுக்கு இரவல் கொடுக்காதீர்கள். இது உங்கள் மீது அதிக அன்புடனும், பாசத்துடனும் வாங்கி கொடுத்தது. எனவே அதனை மற்றவர்களுக்கு ஒருபோதும் கொடுக்காதீர்கள்.

  • தங்கம் என்பது மிகவும் லட்சுமி தேவி வசிக்கும் இடமாக கருதப்படுகிறது, அதனை காலில் அணிவது லட்சுமியை அவமதிக்கும் செயலாகும். இது லட்சுமியின் கோபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.

  • பெண்கள் சிலசமயம் தாங்கள் பயன்படுத்தும் சில அலங்கார பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒருபோதும் தூக்கி எறியப்படக்கூடாது. இதனை உங்கள் தோட்டத்திலேயோ அல்லது பூஜையறையிலேயோ வைத்துவிட வேண்டும்.

  • வைரம் உங்களுக்கு பொருத்தமாகிறதா இல்லையா என்பதை சோதித்து பார்த்து கொண்டு அணியவும்.

  • ஒவ்வொரு உலோகமும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்தும். வைரம் அனைவர்க்கும் பொருத்தமானதாக இருக்காது. குறிப்பாக மூக்குத்தியில் வைரம் பதித்து போடுவதற்கு முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்