வெறும் 14 நாட்களில் வீட்டில் பணமழை கொட்டணுமா? இதை மட்டும் செய்திடுங்க

Report Print Kavitha in வீடு - தோட்டம்

இன்றைய கால கட்டத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவே மாட்டேங்குது என புலம்புபவர்கள் ஏராளம்.

இதற்கு காரணம் நாம் அன்றாடம் செலவழிக்கும் வீண் செலவுகள் தான்.

இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க நிறைய வாஸ்து முறைகளும் தாந்திரீக முறைகளும் உண்டு.

அதில் மிகவும் எளிமையாக செலவே இல்லாமல் எளிமையாக வீட்டில் செய்யக்கூடிய எலுமிச்சை பழ தாந்திரீகம் தான் மிகச் சிறந்த பலன்களைத் தருகிறது என்று சொல்லப்படுகின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • செம்பு மற்றும் கண்ணாடிப் பாத்திரங்களுக்கு என்று சில உட்கிரகிக்கும் சக்தி உண்டு. அதனால் உங்களுடைய வசதிக்கு ஏற்றபடி கண்ணாடியோ செம்பு பாத்திரமோ எடுத்துக் கொள்ளுங்கள்.

  • முதலில் ஒரு செம்பு அல்லது கண்ணாடி டம்ளர் ஒன்றை நன்கு சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • சுத்தமான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை முன்பே சுத்தப்படுத்தி எடுத்து வைத்திருந்த செம்பு அல்லது கண்ணாடி டம்ளரில் இந்த நீரை நிரப்புங்கள்.

  • அப்படி நிரப்பிய தண்ணீரில் நன்கு பழுத்த எலுமிச்சை கனி ஒன்றைப் போடுங்கள். தண்ணீரைக் குறைக்க வேண்டாம்.

  • இப்படி நீருக்குள் எலுமிச்சை போட்டு வைக்கப்பட்ட டம்ளரை வீட்டின் வடகிழக்கு மூலையில் கொண்டு போய் வைத்துவிடுங்கள்.

  • அந்த நீருக்குள் இருக்கும் எலுமிச்சை நாம் வைத்திருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகள் அனைத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்.

  • இப்படி வைக்கப்பட்ட தண்ணீரை அடுத்த நாள் காலையில் எடுத்து ஏதேனும் நீர்நிலைகள் அல்லது வீதிக்கு வெளியே தூரமாக ஊற்றி விடுங்கள்.

  • எலுமிச்சையோடு சேர்த்து ஊற்றிவிடுங்கள். அடுத்த நாள் மீண்டும் இதேபோல் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை போட்டு வைக்க வேண்டும்.

  • இதைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்து வாருங்கள்.

  • உங்களுக்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதை உணர்வீர்கள். வீட்டில் பணப்புழக்கம் அதிகமாகும். பணம் சேரும். விரயச் செலவு குறையும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers