வாஸ்துபடி இது எல்லாம் உங்க வீட்ல சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதானாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்

ஒருவரது வாழ்வில் வாஸ்து சாஸ்த்திரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கியதே வாஸ்து என்று சொல்லப்படுகின்றது.

நிம்மதியாகவும், செழிப்பாகவும் வாழ அவர்கள் வசிக்கும் வீடு, தொழிற்சாலை, தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏனைய கட்டடங்கள் வாஸ்து சாஸ்திர விதிகளை அனுசரித்துக் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

வாஸ்து சாஸ்திரப்படி வீடு அமைந்திருந்தால் அங்கு மகிழ்ச்சிக்கும் செழிப்புக்கும் குறைவிருக்காது. உண்மையில் என்னென்ன பொருட்களை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், மகிழ்ச்சி தங்கும் என பார்க்கலாம்.

 • வீட்டின் நுழைவாயில் கதவானது வீட்டினுள் இருக்கும் மற்ற கதவுகளை விட மிகப்பெரியதாக இருக்க வேண்டும் மற்றும் இந்த நுழைவாயில் கதவானது கடிகார சுற்று முறையில் திறக்கும்படி அமைந்து இருக்க வேண்டும்.

 • நுழைவாயில் சுத்தமாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் நல்ல எண்ணங்கள் வீட்டிற்குள் வரும்.

 • குப்பை தொட்டிகள், உடைந்த நாற்காலிகள் அல்லது முக்காலிகள் போன்றவற்றினை வீட்டின் முன் கதவிற்கு அருகில் கண்டிப்பாக வைக்கக்கூடாது.

 • நுழைவாயிலை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தேவையான அளவிற்கு வெளிச்சம் இருக்க வேண்டும்.

 • மாலை நேரத்தில் வீட்டினை இருட்டாக வைத்திருக்கக் கூடாது வெளிச்சமான லைட் போட வேண்டும்.

 • பூஜை அறையில் விளக்கேற்றி வைத்திருக்க வேண்டும். விளக்கேற்றிய பின்னர் விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாடல்கள், சிவன் பாடல்களை ஒலிக்க விடுவது நல்லது.

 • வீட்டிற்குள் அழகிற்காக நீர்வீழ்ச்சி போல் செய்திருப்பார்கள். ஒரு சில வீடுகளில் அதுபோன்ற இயற்கை காட்சிகள் நிரம்பிய படங்களை சுவர்களில் ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது வீட்டில் உள்ள செல்வம், வருமானத்தை வெளியேற்றி விடும் என்பதால் இதுபோன்ற படங்களை அழகிற்காக வைத்திருக்க வேண்டாம்.

 • அனைத்து நடனக்கலைஞர்களின் வீடுகளிலும் நடராஜரின் உருவம் உள்ள சிலையோ, படமோ இருக்கும். ஆனால் நடராஜரின் நடனம் ஊழிக்காலத்தை அதாவது அழிவினை உணர்த்தக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஒரு காலை தூக்கி நடனமாடியபடி இருக்கும் நடராஜர் உருவத்தை வீட்டிற்கு வைப்பது நல்லதல்ல என்கின்றனர்.

 • பணப்பெட்டி அல்லது முக்கிய பைல்கள் வைக்கும் பெட்டி அல்லது பீரோவை அறையின் கன்னி மூலையில் தெற்கு அல்லது மேற்குச் சுவரை ஒட்டி வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும்.

 • நுழைவாயில் பகுதியில் வாசலுக்கு எதிர்திசையில் கண்ணாடியினை வைக்கக்கூடாது அப்படியிருந்தால் அது நுழைவாயில் கதவின் பிம்பத்தினை அப்படியே பிரதிபலிக்கும், இதனால் வீட்டினுள் வரும் நல்ல ஆற்றலை அப்படியே திருப்பி அனுப்பி விடும்.

 • வீட்டிற்குள்ளேயோ அலுவலகத்திலேயோ உடைந்த பொருட்களையோ, உடைந்த கண்ணாடிகளையோ, சாமி படங்களையோ வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அது பொருளாதார ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும் பணம் செலவாகும்.

 • வீட்டிற்குள் வைத்து வளர்க்க வேண்டிய செடிகளை மட்டுமே வளர்க்க வேண்டும். முள் செடிகள், எதிர்மறை சக்திகளை அதிகரிக்கக்கூடிய செடிகளை வளர்க்கக் கூடாது. அப்படி வளர்த்தால் பணத்தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி விடும்.

 • செயற்கை செடிகளையோ காகிதப்பூக்களையோ வீட்டிற்குள் வைத்திருக்கக் கூடாது. இது வீட்டிற்குள் எதிர்மறை எண்ணங்களை நாமே வரவேற்பது போலாகிவிடும்.

 • அன்னாச்சிப் பழம் ஒவியத்தை உங்களது வீட்டில் அல்லது தொழில் நடக்கும் இடத்தில் முன்புற அறைகளில் வரைந்து வைத்தால் அதிஷ்டமும், வாய்ப்புகளும், நேர்மறை எண்ணங்களும் தேடி வரும்.

 • பழுதடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால் அதை உடனே கடையில் மாற்றி விடுவது நல்லது. அல்லது எடைக்கு போட்டு விட வேண்டும். அப்படி வீட்டிலேயே போட்டிருந்தால் அது எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சண்டை சச்சரவுகளை அதிகரிக்கும்.

 • காதலின் பெருமையை உணர்த்துவதற்காக தன் மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய கல்லறைதான் தாஜ்மகால். இது மரணத்தையும் சோகத்தையும் நினைவு படுத்தக்கூடியது. எனவே இதுபோன்ற படங்களையோ, சிலைகளையோ வீட்டில் வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருந்தால் இதனால் வீட்டின் நிம்மதி குலைந்து போகும்.

 • வீட்டு மனையிலோ, தொழிற்சாலை மனையிலோ, ஈசான்யம் மூடப்படக்கூடாது. இதனால் பிரச்சனைகள், மனச் சோர்வு, குழப்பம், சண்டை சச்சரவுகள் அதிகமாகும்.

 • செயல்களில் முன்னேற்றமின்மை, வறுமை, காரியத்தடை,உடல்நலக் குறைவு, விபத்துக்கள், அகால மரணம், சந்ததிக் குறைவு ஆகிய தீய பலன்களை ஏற்படுத்தும்.

 • குழந்தைகளின் படுக்கை அறைக்குள் சிங்கம், புலி, போன்ற காட்டு விலங்குகளின் படங்களை ஒரு சிலர் வீடுகளில் மாட்டி வைத்திருப்பது இது நல்லதல்ல. அந்த மிருகங்களின் குணங்கள் வீட்டில் உள்ள நம் குழந்தைகளுக்கு தொற்றிக்கொள்ளும் என்கின்றனர்.

 • இயற்கை காட்சிகளையும், மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் படங்களையும் மாட்டி வைப்பது நல்லது.

 • மகாபாரத போர்க்களத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜூனன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்திருப்பார்கள்.

 • ராமாயண போர்க்கள காட்சியும் பாதிப்பை ஏற்படுத்தும். இது குடும்ப ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் நன்மை தரக்கூடியது அல்ல என்றும் ஆனால் ராமர் பட்டாபிஷேக படங்களை வைத்திருப்பது குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.

 • பழுதடைந்த பழைய பொருட்கள், உடைந்த பொருட்கள், ஒடத்தின் படம் ஆகியவற்றை கண்டிப்பாக வீட்டினுள் எந்த பகுதியிலும் வைக்க கூடாது.

 • படுக்கை அறையில் ஆந்தை சிலை, ஆந்தை படம், ஓடம், நீர்வீழ்ச்சி போன்ற படங்கள், மீன் தொட்டி, போன்றவற்றை வைக்க கூடாது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...