செவ்வாய் கிழமை மட்டும் இதை செய்திடுங்கள்: செல்வ மழை கொட்டுமாம்

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இதை செய்தால் வீட்டில் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் பெருகும் என்று கூறுகிறது.

செவ்வாய் கிழமை என்ன செய்ய வேண்டும்?
  • செவ்வாய் கிழமை எளிய பரிகாரம் ஒன்றை மேற்கொண்டால் வீட்டில் தங்கம் நிலைத்து நிற்கும்.
  • செவ்வாய் கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில் காலை எழுந்தபின்னர் யாருடனும் பேசாமல், ஒரு பித்தளைக் குடத்தில் துவரம்பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி கொள்ள வேண்டும்.
  • குடத்தின் மேல்பகுதியை தேங்காய் கொண்டு மூடிவிட்டு குடும்பத்தினருடன் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
  • அங்கு சாமியின் முன்பாக குடத்தை வைத்து அபிஷேகம் செய்த பின்னர், குடத்தை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர வேண்டும்.
  • பின்னர் கடலையை அவித்து தானம் செய்ய வேண்டும், இவ்வாறு ஸ்வர்ண தோஷம் நீங்க செவ்வாய் கிரக பூஜைத்தானம் செய்தால் தங்கம் நிலையாக இருக்கும்.
  • செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.
  • வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம்.
  • செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers