வீட்டில் இதை செய்தால் பண மழை கொட்டுமாம்! உடனே செய்திடுங்கள்

Report Print Jayapradha in வீடு - தோட்டம்
455Shares

செல்வ வளம் நம்முடைய வீட்டில் அதிகமாக இருந்தால், நமது தேவைக்கேற்ப செலவுகளை செய்து நம்மைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளலாம்.

வீட்டில் செல்வ வளம் செழிக்க உதவும் வாஸ்துக்கள்

 • நமது வீட்டில் பணம் மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்க வேண்டும். மேலும் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சாம்ராஜ்யம் வடக்கு திசையில் உள்ளதால், அந்த பெட்டியை வடக்கு திசையை நோக்கி திறக்க வேண்டும்.

 • வீட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாடிப் படிகளில், எந்த ஒரு கனமான இயந்திரங்கள் மற்றும் பொருளையும் அந்தப் பகுதியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

 • வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், அந்தக் குழாயிலிருந்து வெளியேறும் நீரைப் போல, நமது வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறிவிடும்.

 • நமது வீட்டில் பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைக்க வேண்டும். இதனால், பெட்டியில் உள்ள பணம், கண்ணாடியில் பிரதிபலித்து, அந்த பணத்தின் செல்வ நிலையை இரண்டு மடங்கு அதிகப்படுத்தும்.

 • நமது வீட்டில் அதிகமாக செல்வ வளம் குறைவது போல தெரிந்தால், உடனே நமது வீட்டின் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வைக்க வேண்டும்.

 • நமது வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், நம்முடைய வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.

 • நமது வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி இருக்குமாறு, தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் நமது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

 • நாம் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்கள் அல்லது கோவில் இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். எனவே அவ்வாறு இருக்கும் இடத்தில் நாம் வீடு கட்டி குடியேறுவதை தவிர்க்க வேண்டும்.

 • வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்க கூடாது. ஏனெனில் எப்போதுமே நம் வீட்டின் மையப்பகுதி காலியாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் அதிகமாகும்

 • வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வமும் போய்விடும்.

 • நம் வீட்டின் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.

 • வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.

 • நம் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் செல்வ வளத்தை நமது வீட்டில் அதிகரிக்கலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்