தினமும் காலையில் இதை மட்டும் செய்தால் போதும் வீட்டில் செல்வம் பெருகும்

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

ஒரு நல்ல நாளின் தொடக்கம் அந்நாளை நாம் ஆரம்பிக்கும் விதத்தில் தான் உள்ளது. அதாவது, காலையில் எழுந்ததும் சிறிது உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை செய்யும் போது மனம் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

செல்வம் பெருக செய்ய வேண்டியவை
  • அதிகாலை நேரம் என்பது காலை 3-5 மணி வரை ஆகும். இந்த காலத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். ஏனெனில் இந்த நேரத்தில் தான் காற்றில் ஓசோன் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • எனவே அந்த நேரத்தில் உறக்கத்தை விட்டு எழுவதால் அவர்களின் லட்சியத்தை அடைய முடியும். அதனால் அவர்களின் செல்வம் பெருகும் என்று கூறுகின்றனர்.
  • அதோடு மட்டுமில்லாமல் அதிகாலையில் உறக்கத்தை விட்டு எழுவதால் உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு அற்புத நன்மைகளை பெறலாம்.
காலையில் விழிப்பதால் ஏற்படும் நன்மைகள்
  • அதிகாலை உறக்கத்தை விட்டு எழுவதால் மனம் இலகி, புத்துணர்வு அடையும், ரத்த ஓட்டம் சீராகி, உடலும் மனமும் வலுவாக இருக்கும்.
  • அதிகாலை சூரிய ஒளியில் நம் உடல் படுப் போது, நமது மூளையில் செயல்திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • நாம் உயிர்வாழத் தேவையான காற்று, நமது பிராணனைக் காக்கும் பிராண வாயுவைத் தருகிறது. இது நம் உடலில் நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • அதிகாலையில் நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளை செய்தால், அது நம் உடலின் ஆற்றலை சீராக்கி, புத்துணர்வை அதிகமாக்கும்.
  • காலையில் எழுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதோடு ஒரு செயல்களில் ஈடுபடும் போது, அந்த செயல், மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers