கஷ்டங்கள் நீங்க தொடர்ந்து 21 நாள்கள் இந்த பொருள்களை படுக்கையில் வையுங்கள்

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் நீக்க சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்துவின் மூலம் சில பொருள்களை பயன்படுத்தி தீர்க்கும் வழிகளைப் பற்றி பார்ப்போம்

சந்தனக் கட்டை

இரவில் தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் காப்பர் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்கலாம் அல்லது தலைக்கு அடியில் சந்தனக் கட்டையை வைத்து தூங்குவதன் மூலம் கோபம் தணியும்.

வெள்ளியாலான பொருள்கள்

வெள்ளியாலான பொருளை அணிவது அல்லது வெள்ளி பாத்திரத்தில் நீரை நிரப்பி படுக்கைக்கு அடியில் வைப்பதன் மூலம் ஒருவரின் மன உறுதியை மேம்படுத்தலாம்.

தங்க பொருட்கள்

தலையனைக்கு அடியில் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களை வைத்து தூங்குவதன் மூலமோ அல்லது வெண்கல பாத்திரத்தில் நீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைப்பதாலும் தைரியத்தை அதிகரிக்கலாம்.

வெள்ளியாலான மீன்

வெள்ளியாலான மீனை தலையனைக்கு அடியிலோ அல்லது வெள்ளி பாத்திரத்தில் நீர் நிரப்பியோ வைப்பதன் மூலம் உங்களை தேடி அதிர்ஷ்டத்தை வரச்செய்யலாம்.

நீல நிற கல்

நீல நிற கல்லை தலையனைக்கு அடியில் வைப்பது அல்லது இரும்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி படுக்கைக்கு அருகில் வைப்பதால் கண் திருஷ்டி விலகும்.

குறிப்பு

மேலே குறிப்பிட்ட அனைத்தும் தொடர்ச்சியாக 21 நாள்கள் கண்டிப்பாக செய்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers