உப்பை இந்த கிழமைகளில் வாங்கினால் வீட்டில் நிச்சயம் செல்வம் பெருகுமாம்

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

உப்பை பயன்படுத்தி நம் வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டி, செல்வத்தை அதிகரிக்கலாம்.

ஏன் வெள்ளிக்கிழமை உப்பு வாங்க வேண்டும்?
  • செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது. இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது.
  • எனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.
  • லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்று கூறுகின்றார்கள்.
வீட்டில் உப்பை வைக்க வேண்டிய இடம்
  • வீட்டில் இந்த ட்ரிக்கை செய்யும் போது, எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்க வேண்டும்.
  • உள்ளங்கை அளவு உப்பு எடுத்து அதை ஒரு பவுலில் போட்டு குளியலறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். ஆனால் இந்த உப்பை சீரான இடைவேளையில் மாற்றி வைக்க வேண்டும்.
  • சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி, அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்க விட வேண்டும்.
  • சாப்பிடும் டேபிள்களில் அல்லது சாப்பிடும் இடத்தில் உப்பு வைக்க வேண்டும். குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடி அளவு கடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிக்க வேண்டும்.
  • ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து, அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இந்த ட்ரிக்கை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் செய்யக் கூடாது. இம்முறையை செய்வதற்கு கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீடு முழுவதும் கழுவ வேண்டும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers