இதற்கும் உள்ளது வாஸ்து சாஸ்திரம்: இதை மட்டும் பின்பற்றினால் நீங்க அதிர்ஷ்டசாலி ஆயிடுவீங்க

Report Print Printha in வீடு - தோட்டம்

வீடு கட்டக்கூடிய இடம் முதல் வீட்டில் அமைக்கும் வாசல், ஜன்னல், சமயலறை போன்ற அனைத்திற்குமே வாஸ்து சாஸ்திரங்கள் உள்ளது.

அதேபோல் ஒவ்வொருவரும் தங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் செல்வம் ஆகியவை பெற்று மன நிறைவுடன் அமைதி தரும் வாழ்க்கையை வாழ்வதற்கும் சில வாஸ்து டிப்ஸ்கள் உள்ளது.

உறங்கும் முறை

படுக்கையில் உறங்கும் போது, தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி உறங்க வேண்டும்.

வாதம் மற்றும் கபம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், தூங்கும் போது இடது பக்கமாகவும், பித்தம் உள்ளவர்கள் வலது பக்கமாகவும் உறங்க வேண்டும்.

வீட்டின் மாடிப்படிகள்

வீட்டில் அமைக்கும் மாடிப்படிகள் கூட ஒருவரது ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே எப்போதும் வீட்டின் மையப் பகுதியில் மாடிப்படி கட்டுக்களை அமைக்காமல், வீட்டின் ஒரு ஓரமான மூலையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டின் ஹால்

வீட்டின் மையப் பகுதியான ஹாலில் கனமான நாற்காலிகளைப் போட்டு வைக்கக் கூடாது. எப்போதுமே வீட்டின் மையப்பகுதி வெற்றிடமாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் அவ்வீட்டில் உள்ளோர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ரெய்கி படிகங்கள்

ரெய்கி படிகங்களை நம் வீட்டின் பிரம்மஸ்தானமான மையப்பகுதியில் வைப்பது நல்லது. இதனால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாகும்.

வீட்டின் உத்தரங்கள்

சில வீடுகளில் வீட்டின் மையப்பகுதியில் உத்தரங்கள் இருக்கும். அவ்வாறு இருந்தால், அது வீட்டில் உள்ளோருக்கு ஒரு குழப்பமான மனநிலையை கொடுத்து, மனதில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கு தடையை ஏற்படுத்தும்.

மெழுகுவர்த்தி வைக்கும் முறைகள்

வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால், அவர் தங்கும் அறையினுள் ஒரு மெழுகுவர்த்தியை சில வாரங்களுக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

மெழுகுவர்த்தியை வீட்டில் வடக்கு திசையில் ஏற்றி வைத்தால், அது தொழிலுக்கு நல்லது.

அதுவே வடகிழக்கு பகுதியில் ஏற்றி வைத்தால், அதனால் அறிவாற்றல் மேம்படும். கிழக்கு திசையில் ஏற்றினால், குடும்பம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தெற்கு திசையில் ஏற்றினால், அது பெயர் மற்றும் புகழை உண்டாக்கும். தென்மேற்கு பகுதி என்றால், காதல் மற்றும் உறவுகள் சிறப்பாக இருக்கும்.

வீட்டை சுற்றியுள்ள சுவர்

வீட்டைச் சுற்றியுள்ள சுவர் மற்றும் நுழைவு வாயில் கதவு ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். அதிலும் வீட்டின் நுழைவு வாயிலின் பக்கவாட்டில் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்ப்பது நல்லது.

அதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers