உங்க வீட்டில் செல்வம் ஓகோனு கொட்டும்: இதை உடனே செய்திடுங்கள்

Report Print Printha in வீடு - தோட்டம்

வாழ்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் தங்களின் வீட்டில் செல்வம் தங்கவே இல்லை என்ற கவலை பலரிடமும் இருக்கும்.

அத்தகையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றினால் விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

செல்வம் மழை கொட்ட என்ன செய்யலாம்?

  • பணம் கொடுக்கும் போது அல்லது வாங்கும் போது அடர் நிறமாக இல்லாமல் லைட் கலர் உள்ள ஆடைகளை அணிந்துக் கொள்ள வேண்டும்.

  • வடக்கு திசையை தவிர்த்து, மேற்கு திசையில் மட்டும் எப்போதும் தலை வைத்து உறங்குவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

  • நமது வீட்டு பூஜை அறையில் 2 கடவுள் சிலைகளை எதிரெதிரே வைத்து வணங்கக் கூடாது.

  • கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டாமல், கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் வைக்கலாம்.

  • செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர். அதனால் வீட்டில் பல வகையான ஊறுகாய்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

  • வீட்டில் 3 நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்கவோ, உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்கவோ விடக் கூடாது.

  • வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்