இந்த பொருட்களை தயவு செய்து வீட்டில் வைக்க வேண்டாம்: என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Printha in வீடு - தோட்டம்

நமது வீட்டில் ஒருசில பொருட்களை வைப்பதன் மூலமாக, அதிர்ஷ்டம், அன்பு, சொத்துக்கள், உறவுகள் போன்ற பலதரப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

அதே சமயத்தில் நம் வீட்டில் ஒருசில பொருட்களை வைத்துக் கொள்வதன் மூலமாக தீய சக்திகள் அதிகரித்து, நாம் செய்யும் காரியங்களில் சில தடைகள், மனக் கஷ்டங்கள் போன்றவற்றை உண்டாக்கும்.

பிடிக்காத நபரின் பொருட்கள்

நம்மை பிடிக்காதவர்கள் சில சமயங்களில் நமக்கு ஏதேனும் ஒரு அன்பளிப்பு அல்லது ஒரு பொருளை கொடுத்திருந்தால், அதனை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த பொருளை வேறு யாருக்காவது பரிசாகவோ அல்லது தானமாகவோ கொடுத்து விட வேண்டும்.

கத்திரிக்கோல்

கத்திரிக்கோலை திறந்த நிலையிலேயே வைக்கக் கூடாது. ஏனெனில் வாய் திறந்த நிலையில் இருக்கும் கத்திரிக்கோல் வீட்டில் எதிர்மறை சக்திகளை அதிகரிக்க செய்துவிடும்.

போட்டோ பிரேம்கள்

புகைப்படங்களை வைத்திருக்கும் போட்டோ பிரேம்களில் ஏதேனும் உடைசல்கள், வெடிப்புகள் இருந்தால் அதனை மாற்றி விட்டு புதிய போட்டோ பிரேம்களை வைக்க வேண்டும். ஏனெனில் அந்த போட்டோ பிரேம்கள் எதிர்மறை சக்திகளை உண்டாக்கும்.

பழைய துணிகள்

வீட்டில் பழைய துணிகள் மற்றும் கிழிந்த துணிகள் இருந்தால் அவற்றை வீட்டில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும். ஏனெனில் அது உங்க வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும்.

இறந்த மிருகங்கள்

புலியின் தோல், மானின் கொம்புகள் போன்ற இறந்த விலங்குகளின் உடலின் பகுதிகளை வீட்டில் வைக்கக் கூடாது. அதனால் வீட்டை சுற்றி எதிர்மறை சக்திகள் சூழ்ந்து கொள்ளும்.

காய்ந்த பூக்கள்

வீட்டில் காய்ந்த பூக்கள் மற்றும் செயற்கையான பூக்களை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் வீடு முழுவதும் எதிர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தும்.

கண்ணாடிகள்

வீட்டில் உடைந்த கண்ணாடிகள், மிகவும் பழைய நிலையில் உள்ள கண்ணாடிகளை வைக்கக் கூடாது. ஏனெனில் உடைந்த மற்றும் அழுக்கான கண்ணாடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.

முள் செடிகள்

வீட்டினுள் சப்பாத்திக் கள்ளி போன்ற முள் செடிகள் மற்றும் வாடிய செடிகளை வைக்கக் கூடாது. ஏனெனில் அது பணக் கஷ்டம், மற்றும் சண்டைகள் போன்ற பிரச்சனைகளை உண்டாகும்.

அயர்ன் பாக்ஸ்

படுக்கை அறையில் அயர்ன் பாக்ஸ் மற்றும் கண்ணாடியை வைக்கக் கூடாது இது தம்பதிகளுக்குள் உள்ள நெறுக்கத்தை குறைத்து, சண்டை சச்சரவுகள் ஏற்பட வழிவகுக்கும்.

வீட்டின் பெயிண்ட் நிறம்

வீட்டு சுவர்களில் அடிக்கும் பெயிண்டின் நிறம் சிவப்பாக இருக்கக் கூடாது. அதற்கு பதிலாக பிங்க், பச்சை, லைட் ப்ளூ போன்ற நிறத்தினை பயன்படுத்த வேண்டும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்