செல்வ வளத்தை பெருக்க சில வாஸ்து டிப்ஸ்

Report Print Printha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி உலகமானது சூரியன், சந்திரன், பூமி, ஒன்பது கோள்கள், காந்த அலைகள் மற்றும் 5 கூறுகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் ஆனது.

இந்த அனைத்து அண்ட சக்திகளும் சரியான இணக்கத்துடன் இருந்தால் தான், மனிதர்களால் செல்வ வளமான வாழ்வை வாழ முடியும்.

அந்த வகையில் வீட்டில் செல்வ வளத்தை பெருக்க உதவும் சில வாஸ்து டிப்ஸ்கள் இதோ,

வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?

 • வீட்டின் வடக்கு பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் வடக்கு குபேரனின் திசையாகும்.

 • வடக்கு-கிழக்கு பகுதியின் மேலே தண்ணீர் தொட்டியை அமைக்க கூடாது. அதனால் வீட்டில் பண அலமாரி முழுவதும் செல்வம் சேரும்.

 • வீட்டின் நுழைவாயிலில் ஏதேனும் ஒயர், கம்பம், குழி அல்லது பிற விடயங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 • வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பணத்தை வைத்திருப்பதன் மூலம், பணம் அதிகம் சேர்வதோடு, வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

 • வீட்டின் வட-கிழக்கு பகுதியில் பூஜை அறையை வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் அவ்விடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, செல்வமும் அதிகமாக சேரும்.

 • வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால், வீட்டில் உள்ள அனைத்து குப்பைகளையும் அன்றாடம் வெளியேற்றி விட வேண்டும்.

 • வீட்டில் மீன்களை வளர்ப்பதாலும், செல்வ வளம் பெருகும். எனவே முடிந்த அளவு சிறிய தொட்டியிலாவது மீன்களை வளர்ப்பது நல்லது.

 • தினமும் குறைந்தது 20 நிமிடமாவது படுக்கை அறை கதவை திறந்து வைக்க வேண்டும். அதனால் செல்வ சேர்க்கை அதிகமாகும்.

 • வீட்டு சுவற்றில் தொங்கும் கடிகாரங்கள் வேலை செய்கிறதா என்று அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை பழுதாகி விட்டால் அதை எடுத்து விடுவது நல்லது.

 • வீட்டில் வைக்கும் தெய்வ சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை வட-கிழக்கு மூலையில் மட்டும் வைக்க கூடாது.

 • கண்ணாடியை பணம் சேமித்து வைக்கும் இடத்தில், அப்பணத்தைப் பார்த்தவாறு வைப்பதன் மூலம், அதிலிருந்து விழும் பிம்பம் செல்வத்தை இன்னும் அதிகரிக்கும்.

 • தென்மேற்கு மூலையை தான் குபேர மூலை என்று அழைப்பர். எனவே பணம் வைத்திருக்கும் பீரோவை வடக்கு பார்த்தவாறு தெற்கு மூலையில் வைக்க வேண்டும்.

 • வீட்டில் கட்டுப்பாடு இல்லாமல் பணம் செலவாகி கொண்டு இருந்தால் கழிவறையில் ஒரு செடியை வைத்து வளர்த்து வரலாம். அதனால் பணம் கையில் கரைவது தடுக்கப்படும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்