ஆண், பெண் நாய்களை யாரெல்லாம் வீட்டில் வளர்க்க வேண்டும்?

Report Print Printha in வீடு - தோட்டம்

நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்களை வாஸ்து பரிகாரம் படி, யாரெல்லாம் ஆண் நாய்களையும், பெண் நாய்களையும் வளர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பெண் நாய்களை யார் வளர்க்கலாம்?

வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு திசை மூடி உள்ளது. வடக்குப் பக்கமோ கிழக்குப் பக்கமோ ஒரு ஜன்னல் வைக்கக் கூட வழியில்லை என்பவர்கள் ஒரு பெண் நாய்க் குட்டியை வீட்டில் வளர்க்கலாம்.

கிழக்குச் சுவர் மூடப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு திசையில் வாசல் மற்றும் திறந்தவெளி உள்ளது. இதுபோன்ற வீட்டு அமைப்பு உள்ளவர்கள் பெண் நாயை வீட்டில் வளர்க்க வேண்டும்.

வீட்டில் தென்கிழக்கு கிணறு உள்ளது. அதை மூட முடியாதவர்கள் தங்களின் வீட்டில் பெண் நாயை வளர்க்கலாம்.

ஆண் குழந்தைகள். மூத்தவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது ஆனால், அவனது மனைவிக்கு எப்பொழுதும் மருத்துவச் செலவு அதிகமாக உள்ளது என்று கவலைப்படுபவர்கள் பெண் நாயை வீட்டில் வளார்க்கலாம்.

ஆண் நாய்களை யார் வளர்க்கலாம்?

உங்களின் வீடு, மனை ஆண்கள் பெயரில் இருந்தாலோ அல்லது வீட்டின் வாசல் வட கிழக்கு திசையில் இருந்தாலோ அவர்களின் வீட்டில் ஆண் நாயை வளர்க்கலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்