இதை படுக்கை அறையில் வைத்து உறங்குங்கள்: உங்க அதிர்ஷ்டம் பெருகும்

Report Print Printha in வீடு - தோட்டம்

சில வாஸ்து சாஸ்திரங்கள் நம்முடைய குணங்களான தைரியம், சாந்தம், வீரம், மன உறுதி ஆகியவற்றை அதிகரிக்க சில பொருட்களை நம்முடைய படுக்கைக்குக் கீழே வைத்து உறங்கினால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறது.

அதிர்ஷ்டம் பெருக

தங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டமே இல்லை என்று வறுந்துபவர்கள், இரவில் உறங்கும் போது தலையணைக்கு அடியில் வெள்ளில் ஆன மீனை வைத்தோ அல்லது அதில் நீர் நிரப்பியோ வைக்க வேண்டும்.

கோபம் குறைய

கோபம் அளவுக்கு அதிகமாக வருபவர்கள் தலையணைக்கு அடியில் சிவப்பு சந்தனக் கட்டையின் சிறிய துண்டை வைத்து உறங்க வேண்டும்.

மன உறுதி அதிகரிக்க

மன உறுதி இல்லாதவர்கள் படுக்கைக்கு அடியில் வெள்ளிப் பாத்திரத்தில் நீர் நிரப்பி வைக்க வேண்டும். அதோடு ஏதேனும் ஒரு வெள்ளி ஆபரணத்தை அணிய வேண்டும்.

தைரியம் அதிகரிக்க

தங்கம் அல்லது வெள்ளிப் பொருட்களை கட்டிலுக்கு அருகில் அல்லது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும் அல்லது வெண்கலப் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைக்கலாம்.

கண் திருஷ்டி விலக

உங்க வீட்டில் கண் திருஷ்டி உள்ளதை போன்று உணர்ந்தால், 21 நாட்களுக்கு தொடர்ந்து இரும்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி, கட்டிலுக்கு அருகில் வைத்துக் கொண்டு உறங்க வேண்டும். அதோடு நீல நிறக்கற்களை தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

மேற்கூறப்பட்டுள்ள செயல்முறைகளை தொடர்ந்து 21 நாட்களுக்கு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers