உப்பை இதற்கெல்லாம் பயன்படுத்தலாம்: உங்களுக்கு தெரியுமா?

Report Print Printha in வீடு - தோட்டம்

தரைகள், துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றில் உள்ள அழுக்குகள் மற்றும் கறைகளை சுலபமாக போக்க உப்பு பயன்படுகிறது.

உப்பை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

  • ஒரு மெழுகு தாளில் உப்பை தூவி, சூடாக உள்ள அயர்ன் பாக்ஸை அந்த தாளின் மீது தேய்த்தால், அயர்ன் பாக்ஸ் மீதுள்ள அழுக்கு போய்விடும்.

  • துணிகளில் உள்ள கரையை போக்க எலுமிச்சை சாற்றில் உப்பை கலந்து, அதை கரைகள் மீது தடவி, சிறிது நேரம் சூரிய ஒளியில் காயவைத்து துவைத்தால், துணியில் உள்ள கரைகள் போய்விடும்.

  • உப்பு, பேக்கிங் சோடா மற்றும் பாத்திரம் கழுவும் சோப்பு ஆகியவற்றை கொண்டு பாத்திரம் கழுவும் டிட்டர்ஜென்ட்டை தயாரித்து பாத்திரங்களை கழுவினால் சுத்தமாகிவிடும்.

  • ஒரு பாட்டிலில் 2 கப் தண்ணீர் மற்றும் 1/4 கப் உப்பை போட்டு அதில் கிரீஸ் படிந்து, கறையாகி உள்ள ஸ்பாஞ்சை முந்தைய நாள் இரவில் ஊற வைத்து எடுத்தால், கறைகள் இருக்காது.

  • கிரீஸ் படிந்த இடத்தில் உப்பை போட்டு நன்றாக மூடி, அதன் மீது தண்ணீர் ஊற்றி, 10 நிமிடங்கள் கழித்து அதன் கறைகளை சுலபமாக போக்கலாம்.

  • காய்கறி வெட்ட பயன்படுத்தப்படும் மர கட்டையின் மீது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் வெந்நீரை ஊற்றி கழுவினால், அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.

  • விரிசல் விழுந்த முட்டையின் மீது உப்பை தடவி, 10-15 நிமிடங்கள் கழித்த பின் அதில் உள்ள பிசுபிசுக்களை சுலபமாக துடைத்து விடலாம்.

  • கறைகள் உள்ள இடத்தில் உப்பை தூவி, 5 நிமிடங்கள் கழித்து, பின் அதன் மீது குளிர்ந்த நீரை தெளித்து துடைத்தால், கறைகள் நீங்கிவிடும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்