எதற்காக வடக்கு திசையில் ஜன்னல் வைக்க வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Deepthi Deepthi in வீடு - தோட்டம்

வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என குறிப்பிடப்படுகிறது. சோமன் தான் குபேரனின் அதிதேவதை.

குபேர கடாட்சம் விரும்பும் நபர்கள் வீட்டில் வடக்கு ஜன்னல் அமைத்து கட்டுவது நல்லது.

மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றன. இவற்றில் சங்கமம், பத்மமும் முதல் நிலை தகுதி பெரும் நிதிகள் என குறிப்பிடப்படுகின்றன

கோயில்களில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். இது தான் வழக்கம்.

அதே போல வீடுகளில் கூட பண வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

வடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது உங்கள் தோளில் நீங்களே பாரம் ஏற்றி வைத்துக்கொள்வது ஆகும்.

நீங்கள் வசிக்கும் வீட்டின் வாசல் எத்திசை நோக்கி இருப்பினும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படும்படி அமைக்க வேண்டும்.

இதற்கு ஏற்ப வடக்கு திசையில் ஜன்னல் அமைப்பது வீட்டின் வருமானத்தை பெருக செய்யும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments