வீட்டில் பறவைகள் கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா?

Report Print Printha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரங்களின் படி, புதிதாக வீடு கட்டி குடிபோகும் போது, பலவித பக்திகரமான பூஜைகளை செய்து வழிபடுவார்கள்.

ஏனெனில் புது வீடு கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் அல்லது அந்த இடத்தின் மண்ணிற்கு அடியில் என்ன இருக்கிறது என்பது நமக்கு தெரியாது அல்லவா?

அதனால் அந்த இடத்தில் தீய சக்திகள் எதேனும் இருந்தாலோ அல்லது இனிமேல் அந்த இடத்தில் அண்டக் கூடாது என்பதற்காக பல சிறப்பு பூஜைகள் செய்து வருவது வழக்கமாக இருக்கிறது.

ஆனால், அப்படி இருக்கும் போது, வீட்டினுள் குருவி மற்றும் அணில் கூடுகள் கட்டுவது நல்லதா? அல்லது கெட்ட சகுனமா? என்பது உங்களுக்கு தெரியுமா?

வீட்டினுள் பறவைகள் கூடு கட்டுவது நல்லதா?

அறிவியல் ரீதியாக சில பறவைகளுக்கு தீய சக்திகளை அறிந்து கொள்ளும் ஞானம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிலும், சிட்டுக்குருவி, புறா, அணில் இது போன்ற உயிரனங்களுக்கு தீய சக்திகளை உணரக்கூடிய ஆற்றல் அதிகமாக உண்டு என்று கூறுகின்றனர்.

ஏனெனில் மனிதனர்களுக்கு இல்லாத ஜீவாதார சக்திகள் சிட்டுக் குருவி போன்ற பறவைகளுக்கு அதிகமாக இருக்கிறது.

எனவே இது போன்ற நல்ல சக்தியைக் கொண்ட உயிரினங்கள் நமது வீட்டிற்குள் வந்து கூடு கட்டுவதை தடுக்கக் கூடாது. ஏனெனில் அது நமது வீட்டில் உள்ள தெய்வசக்தியாகும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments