பல்லி, பூச்சி தொல்லையா? முதலில் இதனை செய்துவிடுங்கள்

Report Print Printha in வீடு - தோட்டம்

இன்றைய காலத்தில் யாரும் பல்லிகள் நமது வீட்டில் இருப்பதை விரும்புவதில்லை. இதனால் கடைகளில் விற்கப்படும் நச்சுத் தன்மைக் கொண்ட பல்லி விரட்டி மருந்துகளை பயன்படுத்துகின்றோம்.

நச்சுத் தன்மை வாய்ந்த மருந்து பொருட்களை நமது வீட்டில் பயன்படுத்துவது நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு மிகவும் ஆபத்தானது.

எனவே எந்த உயிரிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில், நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றது போல இயற்கையான முறையில் பல்லி மற்றும் பூச்சிகளை விரட்டுவதற்கு சூப்பரான வழிகள்.

காபித்தூள்

நமது வீட்டில் உள்ள காபித்தூளுடன், மூக்குப் பொடி சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, கூர்மையான குச்சிகளின் முனையில் இந்த உருண்டைகளைக் குத்தி, பல்லிகள் மற்றும் பூச்சிகள் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டும்.

மயில் இறகுகள்

பொதுவாக மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். இதனால் பல்லிகள் வசிக்கும் இடங்கள் நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வைத்தாலே போதும். பல்லிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

மிளகுத் தூள்

பூச்சிக் கொல்லி ஸ்ப்ரே மற்றும் மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு புதிதாக ஒரு பூச்சிக் கொல்லி ஸ்ப்ரே தயாரித்து, அதை பல்லிகள் இருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். மேலும் ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ச்சியான தண்ணீரை பல்லிகள் மீது தெளித்தாலும் பல்லிகள் ஓடிவிடும்.

வெங்காயம்

வெங்காயத்தில் இருக்கும் கந்தக ஆவியை, பல்லிகளால் சகித்டுஹ்க் கொள்ளவே முடியாது. இதனால் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சுவர்கள் மற்றும் மறைவான இடங்களில் வைக்க வேண்டும்.

முட்டை ஓடுகள்

முழுமையாக இருக்கும் கோழி முட்டையின் ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் வைத்தால், வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் ஓடிவிடும். மேலும் கோழி முட்டை ஓடுகளை 34 வாரங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

பூண்டு

ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் வெங்காயச் சாறு, பூண்டுச் சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து, அதை நன்றாகக் குலுக்கி, பின் இதனை வீட்டு மூலைகள் மற்றும் நாம் விரும்பும் வேறு இடங்களில் தெளிக்க வேண்டும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments