இலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன்! யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

Report Print Kavitha in வரலாறு
4725Shares

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.

பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.

அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.

அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.

இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.

அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது.

மேலும் இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களுள் சிறப்புற்று விளங்கும் மன்னார் மாவட்டம் திருக்கேதீச்சரம் மற்றும் திருகோணமலை மாவட்டம் திருக்கோணேச்சரம் ஆகியன இராவணனால் பூஜிக்கப்பட்டதென்றும் இராவணனின் அன்னையால் வழிபாடு செய்யப்பட்டதென்றும் ஈழத்தமிழ் வரலாற்றுக் குறிப்புக்கள் செல்லுகின்றன.

அந்தவகையில் இராவணன் பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்