எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா ஏன் சுட்டார்... காழ்ப்புணர்ச்சியா - போட்டியா? விரிவான அலசல்

Report Print Abisha in வரலாறு
571Shares

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா ஏன் சுட்டார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதை பற்றிய விரிவான தகவல்கள் பார்க்கலாம்

இந்த வழக்கு குறித்து அப்போதைய ஊடகங்களின் பார்வை

எம்.ஜி.ஆரை, எம்.ஆர் ராதா ஏன் சுட்டார் என்பதற்கு ஊடகங்கள் பின்வருமாறு தெரிவித்திருந்தன. அதாவது ” பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் பணம் தேவைப்பட்டது. அதை எம்.ஆர்.ராதா வழங்கியுள்ளார். பின் அந்த பணத்தை எம்.ஆர்.ராதா திரும்ப கேட்டுள்ளார். அப்போது எம்.ஜி.ஆர், படம் வெளியானதும் தானே அந்த பணத்தை எம்.ஆர்.ராதாவிற்கு வழங்கிவிடுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் படம் வெளியாகி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் வாசு எம்.ஜி.ஆர்-யிடம் பணத்தை பெற்றுக்கொள்ள எம்.ஆர்.ராதாவை அழைத்து கொண்டு அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, எம்.ஜி.ஆர்-க்கும் எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்குவாதம் முற்றிபோய் கோவத்தில் எம்.ஆர்.ராத எம்.ஜி.ஆரை சுட்டதாக செய்தி வெளியிட்டனர்.

image : google

வாசு பொலிசாருக்கு அளித்த வாக்குமூலம்

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரிலிருந்து ஒரு குழுவினர் விரும்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள், சென்னை அசோக ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்களுக்காக நானும் எம்.ஆர் ராதாவும், எம்.ஜி.ஆரை சென்று சந்தித்தோம். முன்னதாக பல முறை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்டிருந்தும் எம்.ஜி.ஆர் காலம் தாழ்த்திகொண்டிருந்ததால் எம்.ஆர்.ராதா கடும் கோவத்தில் இருந்தார்.

ஆனால் அன்றைய தினம் நாங்கள் அங்கு சென்றபோது, எம்.ஜி.ஆர் எங்களை வரவேற்றார். சினிமா பற்றிய சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இடையில் கடும் கோவம் கொண்ட எம்.ஆர்.ராதா அந்த இடத்தை விட்டு வெளியேற முற்பட்டார். மேலும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை பாழக்கியது நீதான் என்று தன் வேட்டியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். நான் அவரை தடுக்க முற்பட்டபோது, தன்னைதானே கழுத்திலும் நெற்றியிலும் சுட்டுக்கொண்டார் என்று தெரிவித்தார்.

குறிப்பு - பின்னாளில் இது பொய் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

image : google

பொதுவாக கூறப்பட்ட காரணம்

  • எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நிகழ்ந்த தொழில்முறை போட்டிதான் காரணம் என்றும், குறிப்பாக எம்.ஆர்.ராதாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் என்று நினைத்ததால் இந்த துப்பாக்கிசூடு சம்பவம் நிகழ்த்தியதாக கூறப்படுகின்றது.
  • மற்றொரு காரணம், எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா இருவரும் தந்தை பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்தவர்கள். பெரியார் தனது 72வது வயதில் தன்னைவிட பல வயதுகள் குறைந்த மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் உதித்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம். அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகத்தில் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் இணைந்து கொண்டனர். ஆனால், எம்.ஆர்.ராதா திராவிட கழகத்திலேயே இருந்தார். இந்நிலையில் 1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில், எம்.ஜி.ஆர் பரங்கிமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் காமராஜர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவாக திராவிட கழகம் இருந்ததால், காமராஜருக்கு ஆதரவாக எம்.ஆர்.ராதா பரப்புரையில் ஈடுபட்டார். மேலும், எம்.ஆர் ராதாவும் காமராஜரும் நெருங்கிய நண்பர்களும் கூட. இந்நிலையில் காமராஜர் தோற்றுவிடுவார் என்ற காழ்புணர்ச்சியால், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
image : google

இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணைக்கு பின், எம்.ஆர் ராதாவிற்கு 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தற்கொலை முயற்சிக்காக 6மாத சிறை தண்டனையும், உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காக 2ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சட்டவிரோத நடடிவக்கையில் ஈடுபட்டதற்காக 2ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதிப்பப்பட்டது. இந்த தண்டனை வயது அடிப்படையில் குறைந்த அளவில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின் எம்.ஆர்.ராதா அளித்த மேல்முறையீடு மனுவில் அவருக்கு தண்டனை 3 1/2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

image : google

அனைவரையும் வியக்க வைத்த விஷயம்

எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார். பின்னர் தன்னையும் சுட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதே தவிர உயிர்போகவில்லை. இது எப்படி என்று எம்.ஜி.ஆர் உட்பட அனைவரும் வியந்தனர். காரணம், எம்.ஆர்.ராதா கொண்டு வந்த துப்பாக்கி தனது வீரியத்தை இழந்திருந்தது. அதாவது அந்த துப்பாக்கியையும் தோட்டாக்களையும், எம்.ஆர்.ராதா 1950ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். அவர் எம்.ஜி.ஆரை சுட்ட ஆண்டு 1967. இந்த இடைப்பட்ட காலத்தில் தனது மேஜையில் வைத்து அதை அடிக்கடி அதிர்வு ஏற்படுத்தியுள்ளார். எனவே அது வீரியத்தை இழந்துள்ளது என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவங்களுக்கு பின் 1973ஆம் ஆண்டு பெரியாரின் மறைவில் சந்தித்து கொண்ட எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா பேசி தங்களுக்குள் நட்பு பாராட்டி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image : google
image : google

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்