இந்த நாள் நினைவிருக்கிறதா...? தமிழகத்தின் கட்டுமரத்தை இழந்த தினம் இன்று !

Report Print Abisha in வரலாறு

ஆம் கலைஞர் என்று அனைவராலும் போற்றப்படும் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி இறந்த தினம் இன்று

ஒரு வருடகாலம் கடந்த இந்நாளில், தமிழகத்தில் பல அரசியல் நகர்வுகள் நடந்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் இழந்த தலைவரை பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று அவர் எழுப்பிய முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலைதிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அவரது வரலாறு தொடர்பான பதிவுகள் கீழே பார்க்கலாம்

 • இயற்பெயர் - தக்ஷ்ணமூர்த்தி
 • பெயர்- முத்துவேல் கருணாநிதி
 • சிறப்பு பெயர் - கலைஞர்

 • 1924ஆம் ஆண்டு திருக்குவளையில் பிறந்தார்
 • 1939ஆம் ஆண்டு நட்பு என்ற தலைப்பில் முதல் மேடைப்பேச்சு நிகழ்த்தினார்
 • 1941ஆம் ஆண்டு மாணவன் நேசம் என்ற முதல் பத்திரிகை வெளியிட்டார்.
 • 1942-ஆம் ஆண்டு “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரில் பதிப்பகம் துவங்கிய கருணாநிதி அதோடு பத்திரிகையும் வெளியிட்டார்
 • 1944ஆம் ஆண்டு பழனியப்பன் என்ற முதல் நாடகத்தை அரங்கேற்றினார்
 • 1947ஆம் ஆண்டு ராஜகுமாரி என்று படத்திற்கு முதன்முதலில் வசனம் எழுதினார்
 • 1953ஆம் ஆண்டு கல்லடிகுடியில் முதல் போராட்டத்தில் குதித்தார் (ரயில்மறியல்)
 • அதே ஆண்டு (1953) திருப்பத்தூரில் நடந்த விபத்தில் கருணாநிதியின் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது.
 • 1955ஆம் ஆண்டு கருணாநிதி தனது வாழ்நாளில் பெரும் நாட்களை கழித்த கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது.
 • 1957ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தார்
 • 1957ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக வெற்றிபெற்றார்.
 • 1963ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சட்ட நகலை எரித்ததால் கைது செய்யப்பட்டார்.
 • 1969ஆம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சராக பெறுப்பேற்று கொண்டார்
 • 1969ஆம் ஆண்டு ”நீராடும் கடலுடுத்து” என்ற பாடலை அரசு விழாக்களில் பாடும் பாடலாக அறிவித்தார்.
 • 1971ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
 • 1972ஆம் ஆண்டு மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தில் தேசிய கொடியேற்ற அனுமதி பெற்றுத்தந்தார்.
 • 1974ஆம் ஆண்டு முதல் தேசியகொடியேற்றிய முதலமைச்சர் என்ற பெருமைபெற்றர் கருணாநிதி
 • 1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக முதலமைச்சராக பெறுப்பேற்றார்
 • 1989 ஆண்டு பெண்களுக்கு சம சொத்துரிமை என்ற சட்டம் இயற்றினார்
 • 1996ஆம் ஆண்டு நான்காவது முறையாக முதலமைச்சர் ஆனார்
 • 2001ஆம் ஆண்டு மேம்பால ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
 • 2006ஆம் ஆண்டு 5வது முறையாக முதலமைச்சரானார்
 • 2011ஆம் ஆண்டு கருணாநிதி வசனம் எழுதி வெளியிட்ட கடைசி திரைப்படம் ”பொன்னார் சங்கர்” வெளியானது
 • ஆகஸ்ட் 7 திகதி 2018ஆம் ஆண்டு மாலை 6.10மணிக்கு காலமானார்.

”என் உயிரினும்மேலான அன்பு உடன்பிறப்புகளே என்ற வசனம் தான் அவரின் அடைமொழி

மேலும், தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் கவிழ்ந்துவிட மாட்டேன்” இதுவும் அவரது குரலில் ஓங்கி ஒலிக்கும் வார்த்தைகள்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்