கோவில் முழுவதும் 1500 கிலோ தங்கத்தாலே கட்டப்பட்டதாம்: எங்குள்ளது தெரியுமா?

Report Print Printha in வரலாறு

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக வேலூர் மாவட்டம் விளங்குகிறது.

இத்தகைய வேலூர் மாவட்டத்தில் மாலைக்கொடி என்ற இடத்தில் ஸ்ரீபுரம் பொற்கோவில் எனும் ஆன்மீகத்தலம் அமைந்துள்ளது.

இந்த கோவில் முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்டதாக காட்சியளிக்கிறது. எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்படும் 15 தங்க அடுக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் சித்தரிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வேத சாரங்களை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.

1500 கிலோ தங்கத்தாலே வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலை சுற்றிலும் சிறிய அகழி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநாராயணி அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் கோவிலை சுற்றியுள்ள நட்சத்திர வடிவத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டுமாம்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்