5,000 யானைகள் கொண்டு கட்டப்பட்ட கோவில்: தமிழனுக்கு பெருமை

Report Print Printha in வரலாறு

தஞ்சையில் உள்ள பெரிய கோவில், பெருவுடையார் கோவில் என்று தமிழிலும், பிரகதீஸ்வரர் கோவில் என்று சமஸ்கிருதம் மொழியிலும் கலந்தும் அழைக்கப்படுகிறது.

தமிழன் கட்டிய உலகின் தலைச்சிறந்த, இக்கோவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த முகலாய மன்னர்களின் ஆளுமைக்கு கீழும் இருந்தது.

இக்கோவிலை பெரிய கோவில் என்று நம் வாய் வழியாக கூறினாலும், அது பிரகதீஸ்வர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பிரகதீஸ்வர் என்பது தமிழ்ப்பெயரே அல்ல.

இந்த கோவிலின் கருவறையில் அமைந்துள்ள லிங்கத்தின் உயரம் 12 அடிகள். ஏனெனில் தமிழின் உயிர் எழுத்துக்கள் 12. ஒரு உயிர் எப்படி மனிதர்களுக்கு முக்கியமோ அதேபோல் அந்த கோவிலில் லிங்கம் பொருள் தருகிறது.

அதுமட்டுமில்லாமல் இக்கோவிலின் லிங்கபீடம் அமைந்துள்ள பீடத்தின் உயரம் 18 அடி. அது தமிழ் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை. உயிரொடுமெய் கலந்து மொழியாகிறது.

அதேபோல் மனித உயிர்கள் மெய்யுடன் கலந்ததால் ஒரு மொழி உருவாகிறது. இது போன்ற வாழ்க்கையின் தத்துவங்கள் பலவற்றை இந்த கோவில் குறியீடாக வைத்துள்ளது.

இந்த கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி ஆகும். இது தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை.

உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் பிறக்கின்றது. அது மாதிரி தான் லிங்கமும், லிங்கபீடத்தையும் காக்க கோபுரம் எனும் மிகப்பிரம்மாண்டமான அமைப்பினை கொண்டுள்ளது.

கருவறையின் லிங்கத்திற்கும் வெளியில் அமைந்துள்ள நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 அடி ஆகும்.

இது தமிழ் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை. லிங்கமும் நந்தியும் எப்படி இருக்கிறதோ அதுமாதிரி நம் உயிரும் நம் மொழியும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பினை கொண்டுள்ளது.

இந்த கோவிலின் கட்டுமானப் பணிக்காக மட்டும் மொத்தம் 5,000 யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் முழுமூச்சைக் கொடுத்து கட்டிய இந்த கோவிலில் தலைமைச் சிற்பிகள் முதல் சிறு சிறு உதவி செய்தவர்கள் வரை ஒருவரையும் விடாது அத்தனை பேர்களையும் செதுக்கியுள்ளனராம்.

இந்த ஒற்றைக் கல்லைத் தூக்கி வைக்கவே 5 வருடங்கள் ஆகியதாக கூறப்படுகிறது. இது மொத்தம் 80 டன் எடை கொண்ட கல்லாகும்.

இது ஒரு சராசரி மனிதனின் எடையை விட 1142 மடங்கு பெரியது. சராசரியாக 40 யானைகளுக்கு சமமானதாக உள்ளது.

இத்தனை மடங்கு எடை கொண்ட கல் எப்படி இவ்வளவு உயரத்தில் இன்றளவும் சிறு அடி கூட நகராமல், புவியில் அழுத்தாமல் இருக்கிறது என்றால் அதற்கு இந்த கோவில் புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது தான் காரணமாகும்.

ஒற்றைக் கல் மற்றும் அதிகளவு கிரானைட் கற்களால் கட்டப்பட்ட இந்த நந்தி இந்தியாவின் மிகப்பெரிய நந்திகளுள் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்