எதிர்காலத்தை கணிக்கும் கோவில்: ஆண்டவன் பெட்டி பற்றி தெரியுமா?

Report Print Gokulan Gokulan in வரலாறு
209Shares

சசிகலா சிறைத்தண்டனை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பலவற்றை முன்னரே கணித்து சொல்லிய அதிசய கோவிலாக விளங்குகிறது சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில்.

காங்கேயம்- திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சிவன்மலையின் உச்சியில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலே இத்தனை பெருமைக்கும் உரிய கோவிலாகும்.

இந்த கோவிலின் மூலவரான முருகன் தனது பக்தர்களின் கனவில் தோன்றி குறித்த பொருளை கூறி அதை கொண்டு வந்து சன்னதியில் வைத்து வழிபடும்படி கூறுவாராம்.

இறைவன் உத்தரவிடும் பொருளை வாங்கிவந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆண்டவன் பெட்டி’யில் வைத்து வணங்கி வழிபடுவதே இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த கோவிலின் வழக்கப்படி இறைவன் கனவில் தோன்றி கூறும் பொருளின் மூலம் பெரும் நன்மை அல்லது பெரும் தீமை ஏற்படும் என்பது நம்பிக்கை.

பொதுவாக நன்மையை மட்டுமே கடவுள் செய்வார் என்கின்ற கருத்து இருந்தாலும் நடக்கப்போகும் தீமையை முன்னரே குறிப்பால் உணர்த்தி எச்சரிப்பதென்பது இந்த கோவிலில் குடி கொண்டுள்ள முருகனின் தனிச்சிறப்பாக பக்தர்கள் கருதுகின்றனர்.

முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்ய உத்தரவு வந்ததாகவும் அப்போதிலிருந்து இந்த பகுதியைச் சுற்றியுள்ள நிலங்களின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது என்றும் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.

இதேப்போன்று 2004-ஆம் ஆண்டு தண்ணீர் வைத்து வணங்கும்படி இறைவன் கனவில் வந்து கூறியபோது தான் சுனாமி ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

தற்போது ஒரு பக்தரின் கனவில் வந்து இறைவன் கூறியதாக ‘ஆண்டவன் பெட்டி’யில் சங்கிலி வைத்து வணங்கப்பட்டு வருகிறது, இதன் காரணமாகவே தமிழகத்தின் முக்கிய புள்ளிகளுக்கு சங்கிலியின் மூலம் ஆபத்திருப்பதாக கூறப்படுகிறது.

கோயம்பத்தூர் விமான நிலையத்தில் இருந்து 55 கி.மீ தொலைவில் காங்கேயம் - திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலிக்கு அருகே ஊத்துக்குளி(18 கி.மீ), விஜயமங்களம்(19.5 கி.மீ), திருப்பூர் குளிப்பாளையம்(21.4 கி.மீ ), ஆகிய இரயில் நிலையங்களும் அமைந்துள்ளன.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது இந்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்