ஏலத்திற்கு வரும் உலக இரட்சகர்

Report Print Thayalan Thayalan in வரலாறு
29Shares
29Shares
lankasrimarket.com

உலகப் புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலக இரட்சகர் ஓவியம் அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகிறது.

தனியார் வசம் இருக்கும் டாவின்சியின் இறுதி ஓவியம் இதுவாகும். 1500 ஆம் ஆண்டு மொனாலிசா வரையப்பட்ட அதே காலப் பகுதியில் இதுவும் டாவின்சியால் வரையப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த ஓவியம் Salvator Mundi உலக இரட்சகர் என டாவின்சியால் பெயரிடப்பட்டதாகும்.

யேசு கிறிஸ்துவின் இந்த ஒவியத்தை ஆண் மொனாலிசா என்று சொல்வோரும் உண்டு.

பிரித்தானிய மன்னர் முதலாம் சார்ளஸ் இன் அரச சேகரிப்பில் இருந்த இந்த ஒவியம் 1763 இல் ஏலமிடப்பட்டது. அதன் பின்னர் 1900 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஓவியம் எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருந்தது.

இக் காலப் பகுதியில் யேசுவின் முகத்திலும் முடியிலும் மீள்வர்ணம் தீட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த ஓவியம் மீண்டும் இங்கிலாந்தின் ஏல நிறுவனமான சோத்பியால் 1958 இல் 45 பவுண்சுக்கு விற்கப்பட்டது.

மீண்டும் எங்கிருக்கிறது என்று அறியப்படாத இந்த ஓவியம் 2005 இல் வெளியே வந்தது.

அதே ஆண்டில் ஒரு சிறிய ஏல நிறுவனம் இந்த ஓவியத்தை 7,500 பவுண்சுக்கு அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடம் விற்றது.

இப்போது பிரபல அமெரிக்க ஏல நிறுவனமான கிறிஸ்டியின் கைகளில் இருக்கும் இந்த ஒவியத்தை நவம்பர் மாத 15 ஆம் திகதி ஏலத்திற்கு விட அன் நிறுவனம் முன் வந்திருக்கிறது, 100 மில்லியன் டொலர்களுக்கு இது விற்பனையாகும் என நம்பப்படுகிறது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்