40 ஆண்டுகளாக தூங்காத நபர்...விமானநிலையமே வீடு! வினோதமான ஐந்து மனிதர்கள் பற்றி தெரியுமா?

Report Print Deepthi Deepthi in வரலாறு
883Shares

மாறுபட்ட சிந்தனைகளோடும், மாறுபட்ட வாழ்க்கை முறைகளையும் பின்பற்றும் மனிதர்கள் வசிக்கும் உலகம் நிச்சயமாக விநோத உலகமாகத்தான் இருக்கும்.

அப்படி இந்த விநோத உலகத்தில் வசிக்கும் 5 விநோத மனிதர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

28 வருடங்கள் மறைந்து வாழும் மனிதர்

Shoichi Yokoi என்ற நபர் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் இறந்துவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் சில வருடங்கள் கழித்து இந்நபர் இறக்கவில்லை என்று குகையில் மறைந்து வாழ்கிறார் எனவும் தெரியவந்தது.

வெளி உலகிற்கு தன்னை காட்டிக்கொள்ள விரும்பாத இந்நபர், சுமார் 28 வருடங்களாக குகையிலேயே வாழ்ந்து வருகிறார்.

விமான நிலையத்தில் வசிக்கும் நபர்

Alfred Mehran என்ற நபர் ஈரான் நாட்டை சேர்ந்தவர் ஆவார். அகதியாக பிரான்ஸ் நாட்டிற்கு 1988 ஆம் ஆண்டு குடியேறிய இவர், புகலிடம் கோரி பல்வேறு நாடுகளுக்கு விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விமான நிலையத்திலேயே வசித்து வருகிறார்.

நான் கடவுள்

Matayoshi Mitsuo என்பவர் அரசியல்வாதி ஆவார். இவர் தான் ஒரு கடவுள் என கூறிவருகிறார். அந்நாட்டு மக்களும் இவரை கடவுள் என நம்பி வருகின்றனர்.

இவர் ஜப்பான் நாட்டில் மேற்கொண்டு வரும் சமூக சீர்த்திருத்த பணிகளை கௌவிக்கும் விதமாக ஐநா இவருக்கு விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாப்பாட்டு மனிதர்

Michel Lotito என்ற நபர் Misterr-Eat-it-All என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவர், உணவினையும் தாண்டி கையில் கிடைக்கும் அனைத்தையும் சாப்பிடும் திறமையுடையவர். பிளாஸ்டிக், ரப்பர் என அனைத்தையும் உண்பார்.

தூங்கா மனிதர்

1973 ஆம் ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட Thai Njoc என்ற நபரால் தூங்கமுடியவில்லை. சுமார் 40 வருடங்கள் ஒரு நாள் இரவு கூட இவர் தூங்கியது கிடையாது.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments