வரலாற்றில் ஒகஸ்ட் 05!

Report Print Nivetha in வரலாறு
32Shares
32Shares
lankasrimarket.com

நிகழ்வுகள்

1100

இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.

1305

இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

1583

சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ், நியூபவுண்லாந்தில் அமைத்தார்.

1689

1,500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.

1806

இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1862

அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1870

புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.

1884

விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1914

ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.

1940

இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1943

இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.

1944

இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.

1944

போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.

1949

எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.

1960

புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962

17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962

அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1963

ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1969

மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.

1979

ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.

1989

நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.

2003

இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2006

வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஆகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

பிறப்பு

1802

நீல்சு என்றிக்கு ஏபெல், நோர்வே கணிதவியலாளர்.

1850

மாப்பசான், பிரெஞ்சுக் கவிஞர்

1898

கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர்

1908

ஹரல்ட் ஹோல்ட், ஆத்திரேலியாவின் 17வது பிரதமர்

1915

ஹரி கிருஷ்ண கோனார், மேற்கு வங்க அரசியல்வாதி

1923

தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர்

1926

சோ. அழகர்சாமி, தமிழக அரசியல்வாதி

1930

நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர்

1931

பாப்பா உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி

1968

நளாயினி தாமரைச்செல்வன், ஈழத்து எழுத்தாளர்

1968

மரீன் லெ பென், பிரெஞ்சு அரசியல்வாதி

1970

ஜேம்ஸ் கன், அமெரிக்க இயக்குநர், நடிகர்

1974

கஜோல், இந்திய நடிகை

1987

ஜெனிலியா, இந்திய நடிகை

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments