வரலாறு என்றால் என்ன? என பலருக்குத் தெரிந்துதான் இருக்கும்.
ஆனால் நாம் வாழ்வில் கடந்து வந்த இன்றைய நாட்களில் என்ன நடந்தது என்பதை மீட்டுப்பார்பது ஓர் சுவாரஸ்யம். இந்த சுவாரஸ்யமான விடயத்தை தெரியாத பலருக்கும் அது பற்றிய சிறு குறிப்பினை தொடர்ச்சியாக இங்கு தர முயல்கின்றோம்.
1916
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும்.
1925
இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனான ஹிட்லர் “எனது போராட்டம்” எனும் தனது நூலை வெளியிட்டார்.
1955
முதலாவது டிஸ்னிலேன்ட் (Disneyland) களியாட்ட பூங்கா கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.
1965
சோவியத்தின் சோண்ட் 3 (Zond 3) விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1998
பப்புவா நியூகினியில் 23 அடி கடற் சூறாவளியில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2001
இந்தோனேஷியாவின் சாம்பிட் பகுதியில் பாரிய இனவன்முறைகள் ஏற்பட்டன.
2003
தென்கொரியாவின் டேகு ரயில்வே தீப்பற்றி எரிந்ததில் 200க்கும் அதிகமானோர் பலியாகினர்.
2004
ஈரானில் கந்தகம், பெற்றோல், உரம் ஆகியனவற்றை ஏற்றிச்சென்ற ரயில் தீப்பற்றி வெடித்ததால் 295 பேர் பலி.
2007
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.