தைராய்டு நோயாளிகளே! மறந்தும் கூட இந்த உணவுகளே சாப்பிட்டாதீங்க.... மோசமான விளைவுகளை ஏற்படுத்துமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
368Shares

இன்று தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாகவும் தைராய்டு உள்ளது.

இதற்கு உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த பாதிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

தைராய்டு சுரப்பியானது உடலுக்குத் தேவையான ஆற்றல், வளர்சிதை மாற்றம் போன்றவற்றுக்குத் தேவைப்படுகிறது.

எனவே, தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு நம் உடலின் ஒட்டு மொத்த உறுப்புகளை பாதிப்பு அடையச் செய்யும்.

இதிலும் சில மோசமான உணவுகளை நாம் எடுத்து கொள்வதனால் கூட தைராய்டு பிரச்சினை ஏற்படும். எனவே அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அந்தவகையில் அந்த உணவுகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • நீங்கள் தைராய்டு பிரச்சனையை சந்தித்தால் நீங்கள் உங்கள் உணவில் சோயாவை ஒதுக்குவது நல்லது. சோயா தைராய்டு ஹார்மோன் உறிஞ்சுவதை தடுக்கும் திறனை கொண்டது. அதே நேரம் உங்களுக்கு ஹைப்போ தைராய்டாக இருந்தால் நீங்கள் சோயா சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். ஆனால் அளவாக எடுத்துகொள்ளுங்கள்.

  • நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் ஆட்டின் சிறுநீரகம், இதயம் கல்லீரல் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதாக இருந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் லிபோயிக் அமிலம் உள்ளது. இதை வேறு சில உணவுகளிலும் பெறலாம். ஆனால் இதை அதிகமாக எடுத்துகொண்டால் அது தைராய்டு செயல்முறையில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கும்.

  • பேக்கரி உணவுகளில் அயோடின் இருந்தாலும் அது செரிமான பிரச்சனைகளை உண்டாக்குபவை. எப்போதும் அல்லது அதிக அளவு பேக்கரி உணவுகளை எடுத்துகொள்ளும் போது அது தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டு செய்கிறது அதனால் பேக்கரி உணவு பொருள்களை தைராய்டு இருப்பவர்கள் தவிரப்பதே நல்லது.

  • தைராய்டு பிரச்சனை கொண்டிருப்பவர்கள் துரித உணவுகளை சேர்க்கும் போது அது தைராக்ஸின் என்னும் ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பை உண்டாக்கும். இந்த வகையான துரித உணவுகளில் அதிக அளவு உப்பு பயன்படுத்தப்பட்டாலும் அது போதுமான அயோடின் சத்தை கொண்டிருக்குமா என்பதும் கவனிக்க வேண்டியதாகிறது.

  • நீங்கள் தைராய்டு உடன் பசையம் ஒவ்வாமை கொண்டிருந்தால் நீங்கள் கோதுமை, கம்பு மற்றும் பார்லியில் போன்ற புரதம் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது சிறுகுடல்களை பாதிக்க செய்யும். தைராய்டு செயல்பாடில் மேலும் பாதிப்பை உண்டாக்க செய்யும்.

  • தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு அழற்சிகளை உண்டாக்கும் உணவுகள் வீக்கத்தை உண்டாக்கும். சர்க்கரை, வறுத்த உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு ( ரொட்டி, டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள், வெண்ணெய் சேர்த்து பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றவை அழற்சியை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  • தைராய்டு சுரப்பியின் பணியை மெதுவாக்க செய்யும் இரசாயனங்கள் கோயிட்ரோஜெனிக் காய்கறிகளில் உள்ளது. இது காலே, ப்ரக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றில் உள்ளது. இது உடலில் அயோடின் உறீஞ்சப்படுவதை தவிர்த்து ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வை உண்டாக்க கூடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்