உணவில் தேங்காய் பவுடரை பயன்படுத்தலாமா? இது ஆரோக்கியமானதா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
2716Shares

தேங்காய் மாவில் நார்ச்சத்துகள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன் போன்றவைகள் உள்ளன.

சர்க்கரை சத்தும் குறைவாகவும், கார்போ ஹைட்ரேட், கலோரிகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் கொண்டும் காணப்படுகிறது.

அந்தவகையில் தற்போது இதனை உணவில் சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன நன்மைகள்

  • தேங்காய் மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மேலும் டயாபெட்டீஸ் நோயாளிகள் தங்களுடைய எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இது உதவுகிறது.

  • தேங்காய் மாவில் அதிகளவு ஆரோக்கியமான சேச்சுரேட்டேடு கொழுப்பு உள்ளது. எனவே இந்த கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து மெட்டா பாலிசத்தை அதிகரிக்க செய்கிறது. இந்த மீடிய சங்கிலி கொழுப்பு தொடர் உடம்பில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.

  • உங்களுக்கு மலச்சிக்கல் தொல்லை இருந்தால் தேங்காய் மாவு சிறந்தது. இதில் உள்ள கரையாத நார்ச்சத்துகள் மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி சீரண ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது.

  • தேங்காய் மாவில் உள்ள அதிகப்படியான சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது. இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை (LDL) குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் ஆன HDL அளவை கூட்டுகிறது. இதனால் உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

  • தேங்காய் மாவில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் நமது ஒரு நாள் தேவைக்கான புரோட்டீன் அளவை பூர்த்தி செய்கிறது. இதனால் செல்கள், தசைகளை சரி செய்து அது மீண்டும் புத்துயிர் பெற உதவுகிறது. நமது உடலில் உள்ள எலும்புகள், தசைகள், குருத்தெலும்புகள் மற்றும் சருமம் கட்டுமானத்திற்கு புரோட்டீன் சத்து மிகவும் அவசியம்.

  • தேங்காய் மாவில் ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி மைக்ரோ பியல் பொருட்கள் உள்ளன. ஆன்டி மைக்ரோ பியல் பொருளான தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் வாய் புண்ணிற்கு உதவுகிறது.

  • தேங்காய் மாவு க்ளூட்டன் இல்லாதது. அதனால் முடக்குவாதம், மெட்டா பாலிக் சின்ட்ரோம், உடல் பருமன், நரம்பியல் பிரச்சினைகள், இதய நோய்கள் போன்றவை ஏற்படமால் தடுகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்