மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் தானியங்களில் ஒன்றுதான் பட்டாணி.
ஆராச்சியாளர்களின் ஆராய்ச்சியின் படி, பச்சை பட்டணியில் உள்ள Coumestrol எனப்படும் Phytonutrients புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும். இதனை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும்.
அசைவ உணவை சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்தும் பெற முடியும். காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இருக்கின்றன.
அந்த வகையில் மனிதர்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சை பட்டாணி இருக்கிறது.
பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
வளரும் குழந்தைகள், மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும். ஞாபகச்தி அதிகரிக்கும்.
வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப் பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.
உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். பச்சை பட்டாணியானது தோட்டப் பட்டாணி, இனிப்பு பட்டாணி, இங்கிலீஸ் பட்டாணி எனவும் வழங்கப்படுகிறது. பச்சை பட்டாணி லேசான இனிப்பு கலந்த தனிப்பட்ட சுவையினை உடையது.
கர்ப்ப காலத்தில்
கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குழந்தையின் ஊட்டச்சத்துக்கு பச்சை பட்டாணி உதவுகிறது. கர்ப்ப காலத்தில் இது ஒரு நல்ல உணவாக கருதப்படுகிறது.
ஜீரணிக்க எளிதாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வாயு, வீக்கம் போன்ற பிரச்சினைகள் இந்த பச்சை பட்டாணியால் இல்லை. மேலும், அதன் சுவை மற்றும் நறுமணத்தின் காரணமாக இது ஒரு மனநிலை பூஸ்டர் போலவும் செயல்படுகிறது.
எலும்புகள்
மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம்.
பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
நார்ச்சத்து
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும். இந்த நார்ச்சத்து தான் நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.
அணுக்களின் குறைபாடு
பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
இதனால் இரத்த சிவப்பு அணுக்களின் குறைவால் ஏற்படும் அனீமியா, சோர்வு ஆகியவற்றை போக்க பச்சை பட்டாணி சிறந்த தீர்வாகும்.