நாட்பட்ட நோய்களை குணமாக்கும் அற்புத பழம்! இங்கு மட்டும் தான் கிடைக்கும்

Report Print Kavitha in ஆரோக்கியம்
324Shares

கிவனோ என்பது ஒரு வகை முலாம்பழம் ஆகும். இந்த வகை முலாம்பழம் அமெரிக்கா, சிலி, போர்ச்சுக்கல், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.

இந்தப் பழம் வெளியே ஆரஞ்சு நிறத்தில் அல்லது தங்க நிறத்தில் காணப்படும். பழத்தின் வெளிப்புறத்தில் சிறு முட்கள் காணப்படும் .பழத்தின் உள்ளே கிவி பழத்தில் உள்ளது போல் கூழ்போன்று காணப்படும்.

இந்த பழத்தின் விதைகளை ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த பழம் பலவிதங்களில் உடல்நலத்திற்கு உதவுகிறது. இந்தப் பழங்கள் நாட்பட்ட நோய்களை குணமாக்க பெரிதும் உதவுகின்றது.

தற்போது இந்தப்பழத்தினை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

rareseeds

  • அதிக அளவில் நீர் இருப்பதால் வயிறு நிறைந்த ஒரு திருப்த்தியை தருகிறது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மேலும் அதிக உணவு உண்பதைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடை குறையும்.

  • இந்த பழத்தில் ஆல்ஃபா-டோகோபரோலின் (alpha-tocopherol) அதிக அளவு உள்ளது. இது நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்காக மிகவும் முக்கியமானது. இது உடலில் தோன்றும் நச்சுப்பொருட்களை சமன் செய்வதற்கு(அழிப்பதற்கு (neutralize)) இது உதவும்.

  • இந்த பழத்தில் விட்டமின் ஏ மிக அதிக அளவில் காணப்படுகிறது. இது கண் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது கண் பார்வையை சரி செய்ய மற்றும் அதிகரிக்க உதவுகிறது. இந்தப் பழங்களைதொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கண்புரை ஏற்படுவதை தடுக்கலாம்.

  • இந்த வகை பழத்தில் வைட்டமின் இ அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆல்ஃபா-டோகோபரோலின் சுறுசுறுப்பாகவும் மூளையை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

  • இந்தப் பழத்தில் காணப்படும் அதிக விட்டமின் சி சிங் சத்தை உடலுக்கு அளிக்கிறது. இதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. மேலும் உடல் பாகங்களிலும் திசுக்களிலும் இரத்த நாளங்களிலும் செல்களிலும் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்வதற்கும் ப்ரோட்டீன் சத்து அவசியமாகும்.

  • இந்த வகை ழங்கள் உடலின் சர்மத்தில் ஏற்படும் வடுக்கள் மற்றும் காயங்களினால் ஏற்பட்ட தழும்புகளை மறைக்கின்றன மேலும் சுருக்கங்களை தடுக்கின்றன. முதுமை தன்மை இல்லாமல் இளமையாக வாழலாம்.

  • கிவனோ பழத்தில் உள்ள கரிம சேர்மங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்கின்றன. குறிப்பாக அட்ரினலின் மற்றும் மன சோர்வை உருவாக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களாக உள்ள மன அழுத்தத்தில் இருந்து விடுபட இயலும்.

  • கிவனோ பழத்தில் உள்ள அதிக நார் சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கின்றன இதன் மூலம் வாயு பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். இதுகுடல் இயக்கங்களை வழக்கமான முறையில் வைத்திருத்தல் மற்றும் தசைப்பிடிப்பு, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று புண்களை போன்ற கடுமையான நிலைமைகளை தடுக்கிறது.

  • கிவனோ பழத்தில் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும் இன்சுலின் வாங்கிகளை கட்டுப்படுத்துகிறது இதன் மூலம் இன்சுலின் சுரத்தல் சரிசெய்யப்பட்டு நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

  • கிவனோ பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இதர தாதுப்பொருள்கள் உள்ளன. எலும்புகளையும் வலிமைப்படுத்தவும் எலும்பு புரை வராமல் தடுக்கவும் இந்தப் பழம் உதவும்.

முக்கிய குறிப்பு

இந்த வகை பழங்களை பழுப்பதற்கு முன்னர் காய்களாக உண்டால் அதில் சில ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளன. இந்த வேதிப்பொருள்கள் தலைவலி காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்கை உண்டாக்கும்.

இவை உயிர்க்கொல்லிகள் அல்ல ஆனால் பழங்கள் முழுமையாக விளைந்த பின்னர் அவற்றை உண்பது நலம். இந்த பழங்களினால் எந்த ஒரு ஒவ்வாமையும் ஏற்படாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்