புற்றுநோயை குணப்படுத்த இந்த பொருளை சாப்பிடலாம்!

Report Print Nalini in ஆரோக்கியம்
334Shares

இன்றைய இளைஞர்களின் உணவுகளில் அதிமுக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு என்றால் அது பன்னீர்தான். சென்ற தலைமுறை வரை வெகுசிலர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த பன்னீர் நாகரீக வளர்ச்சியால் இன்று கிட்டத்தட்ட அனைவரின் இல்லத்தையும் சென்றடைந்து விட்டது என்றே சொல்லலாம்.

அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக பன்னீர் மாறிவிட்டது. ஏனெனில் இறைச்சியை கொண்டு சமைக்கக்கூடிய அனைத்து விதமான உணவுகளையும் பன்னீர் கொண்டு நாம் சமைக்கலாம். அதுமட்டுமின்றி பன்னீரை அதிக குழந்தைகள் விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர்.

ஒருவர் தன் எடையைக் குறைக்கவோ அல்லது தசைகளை வலுவாக்கவோ விரும்பினால், புரதம் (protein-rich) நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

எலும்புகள், தசைகள் மற்றும் உடலின் பிற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பதால் புரதம் வாழ்க்கையின் கட்டுமான தொகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

அந்த வகையில் உயர் தரமான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக முட்டை (Eggs) மற்றும் பன்னீர் (Paneer) மிகவும் பிரபலமான உணவுகளாக விளங்குகின்றன.

இவை இரண்டிலும் புரதத்தைத் தவிர, கால்சியம், பி 12 மற்றும் இரும்பு போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்களுக்கு, பன்னீர் என்பது புரதத்தின் முக்கிய மூலமாக உள்ளது. அதுவே அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய விருப்பம் உள்ளது.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை முட்டைகளைப் போலவே, வெவ்வேறு வழிகளில் உணவில் சேர்க்கலாம். பன்னீர் சாண்ட்விச், பன்னீர் கறிஅல்லது பன்னீர் துண்டுகளை சிறிது எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

கால்சியம்

எலும்புகளின் உறுதிக்கு உதவதாலும் பனீர் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் பனீரில் 83 கிராம் கால்சியம் இருக்கின்றன. பற்களின் வலிமையும் அதிகரிக்கும்.

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம்

எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும்.

பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது.

நினைவாற்றல்

பன்னீரில் உள்ள வைட்டமின் பி குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, இது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. இது குழந்தைகளின் கவனம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.

இரும்புச் சத்து

பனீர் புரோட்டீன் நிறைந்தது. அதோடு உடலுக்கு மிக முக்கிய மினரல்களான கால்சியம், மெக்னீசியம் போன்றவையும் அடங்கியுள்ளன. இதோடு நன்மை தரக்கூடிய கொழுப்பும் அடங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது.

ஆண்மை சக்தி

ஆண்மை சக்தி அதிகரிக்க பன்னீர் உதவுகிறது. ஜிங்க் ஆனது உயிரியல் சக்தியை அதிகரிக்கும். பன்னீரில் ஜிங்க் அதிகமாக உள்ளதால் அதை நாம் உட்கொள்ளும் போது நம்முடைய விந்தணுக்களில் சக்தியை அதிகரிக்கிறது. தரம் குறைந்த விந்து, ஆண்மைகுறைவு, எண்ணிக்கைக் குறைவான விந்து என எல்லா பிரச்சினைகளையும் பன்னீர் போக்கிறது.

புற்றுநோயை குணப்படுத்த

இன்று பெரும்பாலான ஆண்களுக்கு வரும் பிரச்சினைகளால் முதல் இடத்தில் இருப்பது இந்த பிறப்புறுப்பை தாக்கும் புற்றுநோய்தான். பன்னீரில் உள்ள அதிக படியான செலினியம் மற்றும் பொட்டாசியம், ஆண்களின் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்களை தடுக்கும். குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்பை தாக்கும் ப்ரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து காக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்