உடல் எடை, இரத்த அழுத்தை குறைக்கும் அற்புத பழம் எதுன்னு தெரியுமா?

Report Print Nalini in ஆரோக்கியம்
223Shares

டிராகன் பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை போலவே காணப்படும், இது ஒரு கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் நிறம், வடிவம் மற்றும் திகைப்பூட்டும் பூக்கள் இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும்.

இரவில் பூக்கள் பூப்பதால் இதை "நைட் ராணி" என்று கூறப்படுகிறது. வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், அது மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம்.

இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழம் மையத்தில், இனிப்பு கூழ் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு பழம் 700 முதல் 800 கிராம் எடையை கொண்டது.

டிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்று.

இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது, இந்த பழம். பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். இதன் தாயகம், மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா.

உலகம் முழுவதும் மக்களின் இடப்பெயர்ச்சியால் இது தெற்கு ஆசிய நாடுகளுக்கு குடி புகுந்து, அவர்களின் உணவுப் பொருட்களில் முக்கிய இடத்தை பிடித்தது.

டிராகன் பழத்தில் பிரகாசமான சிவப்பு தோல் மற்றும் இனிப்பு கிவி போன்ற சதை உள்ளது. இது கற்றாழை குடும்பத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் ஃபைபர், வைட்டமின்கள் சி மற்றும் பி ஆகியவற்றில் நிறைந்துள்ளது. வண்ணமயமான ஷெல் உண்ணக்கூடியது அல்ல, ஆனால் உள்ளே மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

டிராகன் பழங்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், அடிக்கடி நோய்வாய்ப் பட்டவர்களுக்கு அல்லது புற்றுநோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல முதல் படியாகும்.

இரத்த அழுத்தத்தை குறைக்க

டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.

குடல் புற்று நோய்

நார்ச்சத்து மிகவும் அதிகமாக டிராகன் பழத்தில் இருக்கின்றன. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.

உடல் எடை குறைய

டிராகன் பழகத்தை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் உடல் எடை குறையும். டிராகன் பழகம் கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுப்பது டிராகன் பழம் மட்டும் தான்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்