இந்த இலையை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால் மூட்டுவலி பறந்து போகுமாம்!

Report Print Nalini in ஆரோக்கியம்
2173Shares

மூட்டுவலியால் அவதிபடும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. முன்பு வயதான காலத்துக்கு பிறகு வந்துகொண்டிருந்த நோய்கள் எல்லாம் இப்போது இளவயதிலேயே வந்து பயமுறுத்துகிறது. அதில் மிக மிக முக்கியமானது மூட்டு வலி தான். எலும்புகளின் வளர்ச்சியும் வலிமையும் உறுதியாக இருந்தால் தான் மூட்டுகளும் விரைவில் தேய்மானம் ஆகாமல் இருக்கும்.

சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்

காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக்

கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு

முடக்கற்றான் தனை மொழி”

– சித்தர் பாடல் – இதன் பயன் தெரிந்து தான் சித்தர்கள் பாடலாக பாடி வைத்துள்ளார்கள். ஆகவே கிடைக்கும் போதெல்லாம் முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும், தோப்புகளில், வரப்போரங்களில் இது படர்ந்து இருக்கும். மழைக்காலங்களில் பச்சைப்பசேலென்று கொடி வீசிக் கிடக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வாதத்தினால் வரும் வீககத்திற்க்கு வைத்துக் கட்ட வீக்கம் வடியும்.

முடக்கத்தான் கீரையை வெறுவமன காலை வெறும் வயிற்றில் பச்சையாக கூட சாப்பிடலாம். உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது. மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும்.

நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு

வாரம் ஒரு முறை முடக்கத்தான் இலைகளை, அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும்.

மூட்டு வலி

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையை, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதை ஒரு கப் இட்லி மாவுடன் கலந்து தோசையாக ஊற்றி சாப்பிட்டு வர மூட்டு வலி பறந்து போகுமாம்.

காது வலி

முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து , காது வலி இருந்தால் காதில் 2 சொட்டு ஊற்ற காதுவலி குணமடையும்.

விரை வீக்கம்

விரை வீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை அரைத்து விரைகளின் மீது பற்று போட விரை வீக்கம் குணமாகும்.

சளி இருமல்

ஐந்து மிளகுடன் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து, அதனுடன் இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். வாணலியில் 1/2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானவுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், பூண்டு விழுதை மிதமான சூட்டில் வதக்கிக் கொண்டு, அதில் 1/2 கப் முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கீரையை வேக விட வேண்டும்.

பாதி வெந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொண்டு, கீரை நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து எடுத்து சிறிது நேரம் ஆற விட்டு, பின்னர் பருப்பு மசிக்கும் மத்து கொண்டு கடைந்து பின்னர் வடிகட்டி எடுத்தால் சுவையான முடக்கத்தான் கீரை சூப் தயாராகிவிடும். இந்த சூப் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் தொந்தரவை விரட்டி விடும்.

பொடுகு தொல்லைக்கு

ஒரு கட்டு முடக்கத்தான் கீரையை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின்னர் அந்த நீரை கொண்டு குளிப்பதற்கு முன்பு தலை முடியை நன்கு அலசி விட்டு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

முடக்கத்தான் கீரையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் ஆற வைத்து, அந்த எண்ணெயை குளிப்பதற்கு முன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்