உங்கள் உடலில் மெட்டபாலிசத்தை மேம்படுத்தனுமா? கட்டாயம் இந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
1063Shares

பொதுவாக மெட்டபாலிசம் என்பது வளர்சிதை மாற்றத்திற்காக இயற்கையாக உடலில் உண்டாகும் ஒருவித வேதியியல் மாற்றமாகும்.

இது உடலின் வளர் சிதை மாற்றத்திற்கும், உணவு சரியான முறையில் செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற பெரிதும் உதவுவது.

இந்த மெட்டபாலிச ஆற்றல் குறைந்தால் உடல் சோர்வு, எந்த வேலையிலும் கவனமின்மை உடல் எடை கூடுதல், அல்லது உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எனவே இவற்றை சீராக வைத்து கொள்ள சில ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது ஆகும்.

அந்தவகையில் உடலில் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம்.

  • க்ரீன் டீயில் ஆண்டியாக்ஸிடன்ஸ் நிறைந்துள்ளது. இது இயல்பாகவே மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது. உடலின் கொழுப்பை கரைக்கும் தன்மை க்ரீன் டீயில் அதிகமாகவே உள்ளது. க்ரீன் டீயில் லெமன் கலந்தும் குடிக்கலாம்.

  • பாலில் கால்சியம் மற்றும் புரோட்டின் நிரம்பியுள்ளது. மெட்டபாலிசத்தை அதிகரிக்கக் கூடிய பால் நிச்சயமாக உங்களின் டயட்டில் இருக்க வேண்டிய ஒன்று. பாலில் புரோட்டின் விட்டமின் ஏ, பி1,பி2,பி12,டி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது.

  • கொழுப்பு சத்துள்ள மீன்களான சாலமன், ட்யூனா போன்ற 'ஒமேகா 3' உள்ள மீன்களை சாப்பிடலாம். இதில் புரோட்டீன் விட்டமின் டி ஆகியவை நிரம்பியுள்ளது. இது மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.

  • மிளகில் பைபெரின் நிறைந்துள்ளது. மிளகில் உள்ள பைபெரின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கக் கூடியது. உடலில் கொழுப்பு தங்குவதை தடுக்கிறது. மிளகில் உள்ள வெளிப்புற அடுக்கு கொழுப்பு செல்களை கரைக்க உதவுகிறது.

  • பருப்பு வகைகளில் அதிக இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இது மெட்டபாலிசத்தை அதிகரித்து மற்றும் ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

  • பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்களில் புரதங்கள் நிறைந்துள்ளன. புரதங்கள் கொழுப்புகளை ஜீரணிக்க செய்ய அதிக சக்தியைப் பயன்படுத்துகின்றன. அவை உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்.

  • இஞ்சி மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இஞ்சியை தேநீரில் கலந்து குடித்தால் கூடுதலாக 40+ கலோரிகளை எரிக்க உதவும். மேலும் உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம். இதனால் ஜீரண சக்தி அதிகமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்