சோயா ஆரோக்கியமானதா? ஆனால் அதிகமாக எடுத்து கொண்டால் இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
448Shares

பொதுவாக புரோட்டீன் அசைவ உணவுகளில் தான் நிரம்பியிருக்கிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சத்து கிடைப்பது மிகச் சில உணவுகளிலிருந்து தான் அவற்றில் ஒன்று தான் சோயா.

சோயாவில் தயாமின், நியாசின்,போலிக் ஆசிட், ரைபோபிளேவின் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

அதுமட்டுமின்றி கொழுப்பு சத்து அளவில் மிக குறைவாக இருக்கிறது. சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, சோயா பால், சோயா நகெட் போன்றவற்றை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

அதிலும் சிலருக்கும் இது ஆரோக்கியமான உணவா? இதனை அதிகம் எடுத்து கொண்டால் என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்து என்ற சந்தேகம் காணப்படுவதுண்டு.

உண்மையில் சோயா ஆரோக்கியமானதா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சோயா துண்டுகள் எதனால் ஆனவை ?

சோயாபீன் எண்ணெய் தயாரிக்கும் போது துணைப் பொருளாக கிடைக்கும் கொழுப்பு நீக்கிய சோயா மாவில் இருந்து தயாரிக்கப்படும் சோயா துண்டுகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

100 கிராம் சோயா துண்டுகளில் 52 கிராம் புரதம் , 13 கிராம் நார்ப்பொருள் , 35 கிராம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன.

சத்தானவையா?

சோயா துண்டுகளில் நிறைய புரதச்சத்து உள்ளது. எனவே இது சைவ உணவு உட்கொள்ளுபவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

சோயாவில் இருக்கும் புரதம் இறைச்சி , முட்டை மற்றும் பாலில் இருக்கும் புரதத்துடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருக்கிறது.

நன்மைகள் உள்ளதா?

  • வேகமான வளர்சிதை மாற்றம், தசை கட்டமைப்பு மற்றும் தோல் ,முடி மற்றும் எழும்புகள் ஆரோக்கியம் ஆகியவை நமக்கு கிட்டும்.

  • சோயா நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • சோயாவில் இருக்கும் சோயா ஐசோ ஃப்ளேவோன்கள் நமது உடலில் உள்ள உறுப்புகளை சுற்றி கொழுப்பு சேராதவாறு பார்த்து கொள்ளும். இதனால் உடல் எடை குறைவும் ஏற்படுகிறது.

​அதிக சோயா துண்டுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

  • சோயா பொருட்களை அதிகமாக உட்கொண்டால் நமது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும். இதுவே நாளடைவில் ஈஸ்ட்ரோஜன் டாமினன்ஸ் என்னும் நிலைக்கு வழிவகுத்துவிடும் .

  • நீங்கள் ஆணாக இருந்தால் இந்த ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும் போது Man Boobs ஏற்படும். இதே நீங்கள் பெண்ணாக இருந்தால் அதிக தண்ணீர் உடலில் தங்கும் , வயிறு உப்புசம், முகப்பரு மற்றும் toxic weight gain ஏற்படலாம்.

  • அதிக சோயா துண்டுகளை உட்கொண்டால் மலச்சிக்கல் , குமட்டல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும்.

  • அதிக சோயா துண்டுகளை சாப்பிடுவதால் நமது உடலில் புரதத்தின் அளவு அதிகரித்து யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகி விடும். இதனால் சிறுநீரகம் பாதிப்படைந்து மூட்டுகளில் யூரிக் அமில படிமங்கள் சேர்ந்து விடும். இதனால் மூட்டுகளில் மிகுந்த வலி ஏற்படும்.

​ஒரு நாளைக்கு எவ்வளவு சோயா சாப்பிட வேண்டும் ?

ஒரு நாளில் 25 - 30 கிராம் சோயா துண்டுகள் சாப்பிடுவது நன்மை பயக்கும். இந்த அளவு எடுத்துக்கொண்டால் நமது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்காது. மேலும் நமது உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவும் அதிகரிக்காது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்