தினமும் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு உடம்பில் மிக சீக்கிரம் குறையும்?

Report Print Nalini in ஆரோக்கியம்
534Shares

இந்தியாவில் இயற்கையாக வளர்கிறது. இதன் இலைகள் மற்றும் விதைகளுக்காக 4250 மீ உயரம் வரை உள்ள இடங்களில் வளர்க்கப்படுகிறது. தான்ய பயிர் மற்றும் கீரை வகையாக மேற்கு இமாலய பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

பருப்புகீரை (PURSLANE) சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் ஒமேகா 3 எனும் அமிலம் இருக்கிறது. மேலும், இதனை கோழிக் கீரை என்றும் சொல்லப்படும்.

பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் நிறைந்து உள்ளது. பருப்பு கீரையைப் பருப்புடன் சமைத்து சாப்பிடும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தே இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்ற பெயர் ஏற்பட்டது. பருப்பு கீரையை பெண்களின் கீரை என்று அழைக்கலாம். பருப்பு கீரை தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

பருப்பு கீரை வயிற்றுபோக்கு, வெள்ளைபோக்கு, புண்கள், வறண்ட சருமம் போன்றவற்றுக்கு மருந்தாகும். நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. மீன்களில் காணப்படும ஒமேகா 3 என்னும் சத்தை கொண்ட அற்புதக் கீரை பருப்புக் கீரை.

இலைகளும், விதைகளும் சத்துப் பொருள் கொண்டவை. கீரையாக உட்கொள்ளப்படுகிறது. இலைச்சாறு அல்லது கசாயம் வயிற்றுப் புழுக்களுக்கு எதிரானது. மலமிளக்கி, கல்லீரல் நோய்கள் மற்றும் கணையத்தின் வீக்கம் தீர்க்க விதைகள் பயன்படுகின்றன.

வெயிற் காலத்தில் பூமி சூடாவது போல மனித உடலும் சூடாக இருக்கும். இக்காலத்தில் திடீரென மழை பெய்தால் பூமியில் மேல்பகுதியில் புழுக்கம் தோன்றுவது போல உடலிலும் புழுக்கம் தோன்றும்.

அக்கி, அம்மை

இதனால் பலவீனமடைந்த உடலில் அம்மை, அக்கி, போன்ற நோய்கள் தோன்றும் என்பது சித்த மருத்துவ கருத்து. அக்கி, அம்மை போன்ற நோய்கள் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவதாகும்.

அக்கி வந்தவர்களுக்கு கிராமங்களில் காவிக்கல்லை நீரில் அல்லது பாலில் பாதிக்கப்பட்ட இடங்களில் குழைந்து பூசுவது வழக்கமாக காணப்படுகிறது.

சீத கழிச்சல் சரியாக

ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும்போது வயிற்றுபோக்கு, சீத கழிச்சல் சரியாகும்.

பருப்புக் கீரையின் விதைகளை சிறிதளவு எடுத்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும்.

தலைசுற்றல் பிரச்சனை

கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.

பருப்புக்கீரையானது பித்தம் உடம்பு உள்ளவர்கள், அடிக்கடி தலைசுற்றல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றது.

கெட்ட கொழுப்பு

பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

மலச்சிக்கல் பிரச்சனை

பருப்புக்கீரையை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

வேர்வை கொப்பளங்கள்

பருப்பு கீரையை வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காயத்தால் உருவான கொப்பளங்களுக்கும் அரைத்து தடவலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்