மலக்குடலிருந்து வரும் இரத்தப்போக்கானது செரிமான பாதையின் மேல் அல்லது கீழ் பகுதியில் ஏற்படும் இரத்தப்போக்கு என குறிப்பிடப்படுகிறது.
இதன் அறிகுறிகளாக அடிவயிற்று வலி போன்ற வலியுடன் இருக்கலாம்.
சில நேரங்களில் மலக்குடல் இரத்தப்போக்கானது ஏதேனும் அடிப்படை நோயைக் குறிக்கலாம், எனவே உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
அந்தவகையில் இதற்கான காரணம், அறிகுறிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
மலத்தில் ரத்தம் கலந்து வருவதற்கு காரணங்கள் என்ன?
- பைல்ஸ்
- ஆசன வாயில் உள்ள கிழிசல்
- புற்றுநோய்
மலத்தில் ரத்தம் கலந்து வருவது 2 வகைப்படும்
- கண்ணுக்கே தெரியாது. கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அக்கல்ட் பிளட் என்ற பரிசோதனை மூலம் இதை கண்டுபிடிக்கலாம்.
- மற்றொன்று நன்கு தெரியும். சிறிய புண் அல்லது கட்டியில் இருந்து ரத்தம் கசிந்து வருவதால் இது ஏற்படும்.
மலத்தில் இரத்தம் அறிகுறிகள் என்ன ?
- அடிவயிற்று வலி
- மயக்கமுறுதல்
- பலவீனம்
- காபி வண்ண வாந்திகள்
- குடல் அசைவின்போது வலி
வயிறு தொடர்பான உறுப்புகளில் புற்றுநோய் வருவதை எப்படி முன்கூட்டியே தடுக்கலாம்?
- பச்சைக் காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
- சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம் இருக்க வேண்டும்.
- நடைபயிற்சி அவசியம்.
- எடை கூடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- தினந்தோறும் மலம் கழிக்கும் பழக்கம் இருக்க வேண்டும்
- மன அழுத்தம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் உடனுக்குடன் கவனித்து, சிகிச்சை பெற்றால் சாதாரண வாழ்க்கை வாழலாம்.