பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் கொய்யா இலை...இப்படி பயன்படுத்தினாலே போதும்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
234Shares

கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்கள் மிகுந்தது.

அதுவும் கொய்யா இலையில் புரதம், விட்டமின் C, B6, கோலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளையும் கொண்டுள்ளது.

கொய்யா இலையை போல் ஆகச் சிறந்த ஆயுர்வேத மருத்துவ இலை எங்கும் இல்லை என்று கூட சொல்லலாம்.

அதுமட்டுமின்றி இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அவற்றை கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதால் வயிற்று வலி நீங்கும். வாந்தி சங்கடமும் சரியாகும். இதற்கு, நீங்கள் கொய்யாவின் 5-6 இலைகளை 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் அதை வடிகட்டி அதன் தண்ணீரை குடிக்க வேண்டும்.

  • கொய்யா இலைகளை அரைத்து, விழுதாக்கி அதை மூட்டுகளில் தடவ வேண்டும். இதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

  • கொய்யா இலைகளின் நீர், நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, உடலில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதையும் இது தடுக்கிறது. இதன் மூலம் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது.

  • கொய்யா இலைகளின் நீர் பல்வலி, ஈறு அழற்சி மற்றும் வாய் புண் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. கொய்யா இலைகளை வேகவைத்து, அவற்றை தண்ணீரில் கலந்தது, வடிகட்டி அதை ஈறு மற்றும் பல்லில் படும்படி சிறிது நேரம் வைத்திருக்கலாம்.

  • இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாய் கொப்பளித்தாலும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்