என்றும் இளமையோடு இருக்க இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும்

Report Print Nalini in ஆரோக்கியம்
706Shares

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும்.

நாம் முன்னோர்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் பலவிதமான சத்துகள் நிறைந்து காணப்பட்டன. ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் கண்ட உணவுகளை உட்கொண்டு பலவிதமான நோயால் அவதிப்பட்டு வருகிறோம். இயற்கையாக விளையும் பழங்களை உட்கொள்வதால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது.

உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகள் பலவித பிரச்சினைகளை ஏற்படுத்தும். முக்கியமாக இருதய கோளாறு, இரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்தானது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது.

ஆரஞ்சு பழத்தின் எண்ணிலடங்கா நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

இரத்த சோகை

இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக செயல்பட்டு புது இரத்தத்தை உற்பத்தி செய்கிறது.

மஞ்சள் காமாலை, டைபாயிடு

முக்கியமாக வெயில் காலங்களில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாயிடு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.

செரிமான சக்தியை அதிகரிக்க

செரிமான சக்தியை அதிகரிக்கவும்,பசியை அதிகப்படுத்துவதுடன் வெந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி பெற

கர்ப்பிணி பெண்கள் இப்பழச் சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சிறு நீர் எரிச்சல்

சிறு நீர் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.

சளி, ஆஸ்துமா

சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதிகளில் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சுப் போன்ற பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம்.

தூக்கமின்மைக்கு

தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

நரம்புகள் பலப்பட

ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டல தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெரும்.

பற்கள் பளிச்சிட

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், சுக்கு சேர்த்து இடித்து பல் பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

அசுத்த நீர் வேளியேற்ற

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்