குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கனுமா? இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதுமாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்
759Shares

பொதுவாக வெயிற்காலத்தை விட குளிர்காலத்திலே அதிக நோய் நம்மை வந்து தாக்குகின்றது.

காலநிலை மாற்றங்க காரணமாக மழையும் குளிரும் சேர்ந்து ஒன்றாக வருவதால், நம் உடலுக்கு இவை ஒத்துக்கொள்ளமால், பல சுகாதார பிரச்சனைகளை ஏற்படுகின்றது.

அதில் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் குளிர்காலத்தில் நம்மை பெரிதும் வாட்டி எடுக்கும்.

இதனை போக்க கண்ட கண்ட மருத்துகளை வாங்கி போடமால் எப்படி வீட்டில் இருந்தப்படியே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டாலே போதும்.

நம்மை நோயிலிருந்து நம்மை பாதுகாக்க நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதே சிறந்தது.

அந்தவகையில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பரான பானம் ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஆரஞ்சு - 2
  • கொத்தமல்லி தலை - 2
  • கேரட் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை

ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து, கேரட் மற்றும் கொத்தமல்லி நறுக்கவும்.

இதையெல்லாம் ஒரு பிளெண்டரில் போட்டு அரைத்து கொள்ளவும். சாற்றை வடிகட்டி, புதியதாக குடிக்கவும். சர்க்கரை சேர்க்க வேண்டாம.

நன்மைகள்

foodnetwork

  • ஆரஞ்சு மற்றும் கொத்தமல்லி சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் அதிசயங்களைச் செய்யும்.
  • கொத்தமல்லி உணவிற்கு மணத்தையும், சுவையையும் தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை வழங்கி வருகிறது. கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வரம்பில் ஏற்றப்படுகிறது.
  • கேரட் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இவை அனைத்தும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு தேவை.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்