ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்க வேண்டுமா? இதை தொடர்ந்து செய்யுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
1856Shares

இன்றைய காலத்தில் பலர் தொப்பை குறைக்க படாதபாடு பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

தொப்பை வருவதற்கு நமது பழக்கவழக்கங்கள் தான் காரணம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததோடு, அதில் கெட்ட கலோரிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. இதனால் அவற்றை உண்ணும் போது அவை தொப்பை உருவாக்குகிறது.

அதிலும் உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையும் என்று கண்ட உடற்பயிற்சிகளை செய்தால் தொப்பை குறையாது.

தொப்பை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் சில மாற்றங்களை செய்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடியுங்கள். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், நல்ல செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியெற்றி, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும்.

  • தினமும் காலையில் சீரக நீரைக் குடிக்கலாம். சீரக நீரும் கொழுப்புக்களைக் கரைக்க உதவும் பானமாகும். இது ஒருவரது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, அடிவயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் உப்புசத்தை நீக்கி, தொப்பையைக் குறைக்கும்.

  • அன்றாட காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகளை சேர்ப்பதால், தசைகள் வளர்ச்சியடைவது மட்டுமின்றி, நாள் முழுவதும் முழுமையாக உணர வைப்பதோடு, உட்கொள்ளும் கலோரிகளின் அளவையும் குறைக்கும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுவதோடு, உடலில் கொழுப்பைத் தேங்க வைக்கும்படியான சிக்னலை அனுப்பும் குறைந்த அளவிலான இன்சுலின் என்ற ஹார்மோனை சமப்படுத்தவும் உதவுகிறது.

  • முழு தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதோடு, உயர் கலோரி உணவுகளின் மீதான ஆவலைக் குறைக்கிறது. ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போரை நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

  • குர்குமின் நிறைந்த மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது உடல் பருமன் பிரச்சனையை சரிசெய்ய உதவும். மஞ்சள் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு நல்ல பலனைத் தரக்கூடியது என்றாலும், இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும்.

  • மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை கார்டிசோல் போன்ற கொழுப்பைத் தூண்டும் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கும். இதன் அளவு நீண்ட நாட்கள் அதிகமாக இருந்தால், அது அதிகமான பசியைத் தூண்டுவதோடு, உயர் கலோரி உணவுகளின் மீதான நாட்டத்தை அதிகரிக்கும் மற்றும் அதன் விளைவாக அடிவயிற்றில் கொழுப்பை அதிகமாக தேங்க வைக்கும். இதனை குறைக்க யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை தினமும் சிறிது நேரம் மேற்கொள்ள வேண்டும்.

  • நீங்கள் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்க நினைத்தால், உணவிற்கு முன் நீரைக் குடியுங்கள். இது தொப்பை வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்