இரைப்பை பிரச்சனை இருப்பவர்கள் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடவே கூடாதாம்! உஷாரா இருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
691Shares

நம்மில் பலர் அடிக்கடி இரைப்பை பிரச்சினையால் அவஸ்தைப்படுவதுண்டு. இது நாம் உண்ணும் சில உணவுகள் ஏற்படுகின்றது.

ஆரோக்கியம் என்று நினைக்கும் சில உணவுகள் கூட உங்களது உடல்நலத்தை பாதிக்கலாம்.

இரைப்பையில் பிரச்சனை ஏற்படும் போது, செரிமானத்தில் கடினம், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு போன்றவை எல்லாம் ஏற்படும்.

இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்கமால் இருக்க சில உணவுகளை கட்டாய் தவிர்ப்பது நல்லது.

அந்தவகையில் இரைப்பை பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாத உணவுகளை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • இரைப்பை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பலாப்பழம் இது ஒரு நல்ல தேர்வாக இருக்காது. இந்த பழம் உடலில் வாயு உற்பத்தியை அதிகரிக்கிறது.
  • இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சேனைக்கிழங்கு இதை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது வயிற்று வீக்கத்தை ஏற்படுத்தும்.
  • வெள்ளை முள்ளங்கி ஒரு குளிர்கால காய்கறி ஆகும். இது வாயு பிரச்சினயை உருவாக்கும். நீங்கள் வெள்ளை முள்ளங்கியை உணவிலோ அல்லது சாலட்டில் சேர்க்க விரும்பினால், அதை குறைந்த அளவில் சேர்த்து சாப்பிடுங்கள்.
  • வெள்ளை சுண்டல் வாயுவை ஏற்படுத்தும், மலச்சிக்கல் இருக்கும் நபர்கள் வெள்ளை சுண்டலை உணவில் சேர்க்கக் கூடாது. அல்லது குறைவாக சேர்த்து சாப்பிடலாம்.
  • சிவப்பு பீன்ஸ் இரைப்பை குடல் பிரச்சனைகள் உள்ளவர்கள், கட்டாயமாக தவிர்க்க வேண்டிய உணவாகும். ஏனெனில் இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • ஆல்கஹால் , காபி தக்காளி ஜூஸ் , சிட்ரிக் பழங்கள் , பழச்சாறுகள் கொழுப்பு உணவுகள் , பொறித்த உணவுகள் , கார்பனேற்றப்பட்ட பானங்கள் , காரமான உணவுகள் ,காஃபின் இல்லாத பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்