அன்றாட உணவில் இந்த பச்சை நிற காய்கறியை சேர்த்து வாருங்கள்.... கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
367Shares

அவரைக்காய் அனைவருக்குமே மிகவும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று. இது அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

இதனை அன்றாடம் எடுத்து கொள்வதன் மூலம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.

அந்தவகையில் தற்போது அவரைக்காயை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

krishijagran
  • அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும்.
  • அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.
  • அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும்.
  • அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.
  • அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இத் ரத்தத்தைச் சுத்தபடுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
  • சக்கரைநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.
  • தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
  • அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது சிறுநீரைப் பெருக்கும், சளி, இருமலைப் போக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்