மாரடைப்பு வரமால் இருக்கனுமா? அன்றாட உணவில் இந்த பச்சை காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்க!

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக காய்கறிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பச்சை இலை காய்கறிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏனெனில் பச்சை இலை காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள், ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் ஃபைபர் போன்ற தாதுக்கள் நிறைந்ததாகவும் உள்ளன.

இவற்றை ஒவ்வொரு நாளும் அதிக அளவு பச்சை இலை காய்கறிகளை உட்கொள்வது இரத்த நாளங்களில் கொழுப்பு மற்றும் கால்சியம் படிவுகளை உருவாக்குவதைக் குறைத்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

அதிலும் பச்சை இலை காய்கறிகள் பெரும்பாலனவை மாரடைப்பு ஏற்படும் ஆபாயத்தை குறைக்கின்றது.

அந்தவகையில் மாரடைப்புக்கு என்ன மாதிரியான பச்சை இலை காய்கறிகளை சாப்பிடலாம் என பார்ப்போம்.

  • வேக வைத்த ப்ரக்கோலியை தவறாமல் உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தை குறைக்கும். இது வலுவான எலும்புகளை உருவாக்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

  • காலிஃபிளவரை சாப்பிடுவது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். காலிஃபிளவர் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது.

  • சிவப்பு முட்டைக்கோஸ் உங்க இதயத்திற்கு நல்லது. இது ஆக்ஸினேற்றப்பட்ட எல். டி.எல் அதாவது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. முட்டைக்கோசு அழற்சி எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது, இது இதய நோய்களைத் தடுக்க உதவும்.

  • ஊட்டச்சத்து அடர்த்தியான பிரஸ்ஸல் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயை நிர்வகித்தல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் சில புற்றுநோய்கள் போன்றவற்றை குறைக்க உதவுகின்றது.

  • கீரைகளை சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும். இது உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்